அண்மையில் திலீபன் மகேந்திரன் என்ற இளைஞர் தேசியக் கொடியை எரிப்பது போன்ற படத்தை தன்னுடைய முகநூலில் பதிவேற்றியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்தைக்கிளப்பியது. தான் தேசியக் கொடியை எரித்ததற்கான காரணத்தை அவர் இப்படிச் சொல்லிருந்தார்.
“இந்தியாவின் முதல் சுதந்திர தினத்தில் பேசிய நேரு உலகத்தில் எந்த தேசிய இனத்தின் மீதும் அடக்குமுறை ஏவப்பட்டால் இந்திய ராணுவம் அங்கே நிற்க்கும் என்று கூறினாரே. அதே நேரு பிரதமராக இருந்தபோது மொழிவாரி மாநிலங்கள் பிரித்தபோது தமிழ் தேசிய இனத்தின் பூர்விக நிலத்தை அண்டை மாநிலத்தானுக்கு கொடுத்து அதை எதிர்த்த தமிழர்களை கொன்று, நிலத்தை அன்பளிப்பாக கொடுத்தாரே. அதற்காக எரித்தேன்.
இந்தியா ஒரு கூட்டமைப்பு என்ற போதிலும் வட இந்தியாவில் சில மாநிலங்களில் இந்தி பேசுகிறார்கள் என்ற காரணத்தினால் இந்தியை ஆட்சிமொழியாக்க துடித்திர்களே. அந்த அநீதிக்கு எதிராக எரித்தேன்.
இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்திய தமிழர்களை கொன்று போட்டார்களே. அதற்காக எரித்தேன்.
1974ல் இந்தியா தன்னுடைய சுயநலத்துக்காக தமிழ்த்தேசிய இனத்துக்கு சொந்தமான கச்சத்தீவை தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி சிங்களவனுக்கு கொடுத்ததே. அதற்காக எரித்தேன்.
1987ல் தலைவர் பிரபாகரனை அமைதி பேச்சு வார்த்தை என்று சொல்லி அவரை பின் தலையில் அடித்து கொல்ல சொன்னாரே இந்திய பிரதமர். அந்த ஈன செயலுக்காக எரித்தேன்.
1972ல் இந்தியா சொன்ன அந்த அமைதி ஒப்பந்தத்தையாவது நிறைவேற்று என 12 நாட்கள் உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்து உங்களால் இறந்து போனானே திலீபன். அதற்காக எரித்தேன் கொடியை.
1987ல் தொடங்கி 1990 வரை அமைதிப்படை என்ற பெயரில் 20000 தமிழர்களை கொன்றும் 5000 தமிழ் பெண்களை பாலியல் வல்லுனர்வு செய்ததே இந்திய ராணுவம். அதற்காகதான் எரித்தேன்.
ராஜிவ் காந்தி படுகொலையில் உண்மை குற்றவாளிகள் வெளியில் இருந்தபோதும் அப்பாவி தமிழர்களை சிறையிலடைத்து இன்றுவரை நீதி மறுக்கப்படுகிறதே அதற்காக எரித்தேன்.
1991ல் சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழ் உறவுகளை கொடுஞ்சித்ரவதைக்களுக்கு உள்ளாக்கிய இந்தியத்துக்கு எதிராகவே கொடியை கொளுத்தினேன்.
1992ல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் அதிரடி படையினரால் வாச்சாத்தியில் கற்பழிப்புக்குள்ளான 50க்கும் அதிகமான பெண்களுக்கான நீதியை இன்றுவரை நீதிமன்றம் தரவில்லையே என்ற கோபத்தில் கொடியை கொளுத்தினேன்.
2006லிருந்து 2009வரை ஈழத்தமிழர்களை கொல்ல ஆயுதங்களை கொடுத்த இந்திய ஆட்சிப்பிடத்தை எதிர்க்கவே கொடியை எரித்தேன்.
இந்திய கொடியை தன்னுடைய படகில் ஏற்றிவிட்டு மீன் பிடிக்கசென்ற தமிழ் மீனவர்கள சிங்கள கடற்ப்படை கொல்லமட்டுமல்ல அதற்கு மறைமுக ஆதரவளித்த இந்தியக்கொடியை எரித்ததில் தவறில்லை.
உலகத்தால் தடை செய்யப்பட்ட ரசாயன குண்டுகளை இலங்கையிடம் கொடுத்து தமிழர்களை கொலை செய்த இந்திய கொடியைதான் எரித்தேன்.
முத்துகுமார் தொடங்கி 19 ஈகியர்கள் ஈழப்போரை நிறுத்தச்சொல்லி இன்னுயிரை ஈந்தார்களே. அந்த ஈகையினை இந்திய ஈனத்தமிழர்கள் நினைத்து பார்க்கவில்லையே என்ற எண்ணத்தில் கொளுத்தினேன்.
உலக கோப்பை மட்டை பந்தாட்டத்தில் இந்தியா இலங்கையை வென்றது என்ற செய்தியை அறிந்த சிங்கள கடற்ப்படை இந்திய எல்லைக்குள் புகுந்து தமிழகத்து மீனவர்கள் நான்குபேரை துண்டு துண்டாக வெட்டி கடலில் போட்டதே. அப்போது இந்தியனை யாருடா வெட்டியது என்று யாருமே போராடவில்லையே. அப்போதும் நாங்கள் தமிழர்கள்தானே போராடினோம். அதுக்காகதான் எரித்தேன்.
அது மட்டுமா..?
காவிரியில் தண்ணீர் தரச்சொல்லி நீதிமன்றம் சொன்னாலும் அதை மதிக்காத கர்நாடக அரசை இந்தியா கண்டிக்கவில்லை. அதுக்காகதான் எரித்தேன் .
முல்லைப்பெரியாறு அணையில் எங்களுக்கான உரிமைதான் கேட்டோம். இன்றுவரை கிடைக்கிறதா..? தீர்ப்பு சொன்னாலும் காலில் தூக்கிப்போட்டு மிதிக்கிற கேரளாவை ஒன்றும் பேசமாட்டிர்கள். ஆனால் நான் கொடியை எரித்ததுக்கு கோபப்படுவீர்கள். இதுதான் தேசப்பற்றா..?
என்னை திட்டியும் எதிர்த்தும் பதிவு போடுகிற தோழர்களே. மீத்தேனும், நீயூட்ரினோவுக்கு எதிராக தமிழக மக்கள் போராடுகிறார்களே. அதற்காக என்றைக்காகவது போராடியிருக்கிறிர்களா..? மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். நான் போராடியிருக்கிறேன்.
ஆந்திராவில் 20 தமிழர்களை சுட்டுகொன்றார்களே. அதற்காக நீங்க போராடியதுண்டா ? நான் போராடியிருக்கிறேன். நான் மனசாட்சி உள்ளவன். ஆனால் நீங்க..?
எனக்கு மரண தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் என்னை கொல்லும் முன் ஒரே கேள்வி ?
தமிழர்களுக்காக நான் போராடிய போராட்டங்களும், சிறைதண்டனையும் என் மனதுக்கு சரி என்று பட்டது. கொடியை எரித்ததும் சரி என்றுதான் சொல்கிறேன்.
எனக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க போராடுகிறவர்களே.. இத்தனை ஆண்டுகளில் எத்தனை தமிழர்களின் போராட்டங்களில் போராடியிருக்கிறிர்கள்..? வெறும் தேசப்பற்று கொடியை எரித்தவனுக்கு எதிராக பொங்குவதல்ல. அதை தூண்டிய இந்திய அரசியல்வாதிகளை எதிர்த்தும். யார் செத்தா எனக்கு என்ன என்று போகிறவர்களுக்கு எதிராகவும்தான் போராடவேண்டும். நீங்கள்..?”
இந்நிலையில் மகேந்திரன் மீது தேசியக் கொடியை எரித்த குற்றத்துக்காக வழக்கு தொடர்ப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். ஆனால் தேசியக் கொடி எரிப்பு குறித்த விவாதம் இன்னும் சமூக ஊடகங்களில் தீவிரமாகியுள்ளது.
விலாசினி ரமணி தன்னுடைய கருத்தை சொல்கிறார்: “தேசியக்கொடி எரிப்பு என்பதும் அஹிம்சை வழிப்போராட்டமாகத்தான் எனக்குத் தெரிகிறது. அந்நியர் ஆட்சி காலத்தில் அவர்களை எதிர்க்கத் தேவையிருந்தபொழுது இந்நாட்டின் குறியீடுகள், சின்னங்கள், சுதேசி உற்பத்திகளைப் போற்றுவதற்கான தேவை இருந்தது. இன்றைய போராட்டம் பெரும்பாலும் ஆளும் அரசாங்கத்தை எதிர்த்தே இருக்க வேண்டிய கால கட்டத்தில், இதைவிட அரசாங்கத்தின் பாசிச மனநிலையை அசைத்துப் பார்க்கக்கூடிய அறப்போராட்டம் வேறு என்னவாக இருக்கு முடியும்?”
மத்திய அரசின் கெயில் நிறுவனத் திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி.. விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிப்பதற்கு தடை கிடையாது.விவசாயிகளுக்கு 40 சதவிதம் இழப்பீடு வழங்கவேண்டும் – சுப்ரீம் கோர்ட்டு
40 சதவீதம் எதுக்கு விவசாயிகளின் இறுதி சடங்குக்கா???
ஆபத்தான திட்டமா அமுல் படுத்து உடனே அம்மாஞ்சிகள் இருக்கும் தமிழ் நாட்டுல….
விவசாயிகளை வேரோட புடுங்கனும்னு முடிவு பண்ணிட்டீங்க நடத்துங்க..
எப்பா விஜயகாந்த் படத்தப் பார்த்துட்டு நேத்து பொங்குன திடீர் தேசபக்தர்களே இதுக்கு எத்தனைபேர் பொங்கப் போறீங்க…போராட்டம் நடத்தபோறீங்க …இது என்ன விசயமென்றாவது தெரியுமா???…இதுக்கு நீங்க பொங்கலைன்ன உங்க வீட்டுல இனி சோறு பொங்க முடியாதுங்கோவ் …
திடீர் தேசபக்தர்கள் அனைவரும் “பொங்கி” போராட்டம் நடத்துவீர்களா??? நீங்கள் நடத்துவீர்களா???…..
LikeLike