கோவையில் மத்திய அரசின் சார்பில் கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துவக்க விழா , பொதுக்கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பிரதமர் மோடி இன்று மதியம் கோவை வந்தார்
கட்டிட திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பிரதமருடன் மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜவடேகர், மற்றும் ஐதராபாத் பல்கலை மாணவன் ரோஹித் மரணத்திற்கு காரணம் என்று சுட்டிக்காட்டப்படும் அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனிடையே கோவையில் பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி காட்ட முயற்சித்த 213 பேர் கைது செய்யப்பட்டனர். ஐதராபாத் பல்கலை மாணவன் ரோஹித்தின் மரணத்திற்கு நீதி கேட்கும் விதமாக, மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கோவை அவினாசி ரோடு லட்சுமி மில் அருகே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மற்றும் மாணவ, அமைப்பினர் கறுப்புக்கொடி காட்ட ஒன்று திரண்டனர்.
போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர்.