அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பழ.கருப்பையா வீட்டில் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்றும், பழ. கருப்பையா, காங்கிரஸ் கட்சியில் சேர வேண்டும் என்று அழைப்பு விடுப்பதாக காங்கிரஸ் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் பத்திரிகையாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாவது, 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை பா.ஜ. தலைமையிலான மத்திய அரசு வேண்டுமென்றே முடக்கிவருகிறது. சட்டசபை தேர்தல் கூட்டணி தொடர்பாக, கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும். காங்கிரஸ் சார்பில் விருப்ப மனுக்கள் பெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று இளங்கோவன் கூறினார்.
முன்னதாக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜனும் தங்களுடைய கட்சியில் இணையும்படி பழ.கருப்பையாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.