நாகூர் ரூமி

இறைவனுக்கு இணையாக இன்னொன்றை / இன்னொருவரை வைப்பது ஷிர்க் என்று பொதுவாக புரிந்துகொள்ளப்படுகிறது. ஞானிகளின் தலைவர் கௌது நாயகம் வேறொரு கோணத்தில் அருமையான அரிய விளக்கத்தைக் கூறுகிறார்கள். இறைவனல்லாமல் மற்ற எதையாவது உங்கள் மனம் இறுக்கமாக, விடாப்பிடியாக பிடித்துக்கொண்டிருக்குமானால், அந்த ஒன்றுக்கே உங்கள் உடலும், மனமும், உணர்ச்சியும் அடிமையாக இருக்குமானால், அதுவும் ஷிர்க்தான்.
அப்படிப்பார்த்தால் பணம், பதவி, பெண்ணாசை, பொருளாசை எல்லாமே ஷிர்க்குக்குள் வந்துவிடும். அதாவது நாம் எதற்கெல்லாம் அடிமையாக இருக்கிறோமோ அதெல்லாம் இறைவனைவிட நமக்கு முக்கியமாகப் போய்விடுகிறது.
அந்த வகையில் பார்த்தால் சில சகோதரக் குழுக்கள் உடும்புப் பிடியாக, தாங்கள் சொல்வதுதான் சரி, தாங்கள் சொல்வது மட்டும்தான் சரி, அல்லாஹ்வும் ரஸூலும்கூட தவறாகத்தான் சொல்லியிருக்கிறார்கள், நாங்கள் சொல்வதுதான் வேதம், எங்கள் தலைவர் சொல்வதுதான் எங்களுக்கான வஹீ, எங்கள் தலைவர் சொல்வதை மறுப்பவரெல்லாம் ஷிர்க் செய்பவர். மற்ற எல்லாமே, எல்லாருமே தப்பு என்று சொல்கிறார்களே, அந்த மனநிலை, கருத்தை வணங்குகிற மனநிலையாகும். கருத்தை வணங்குவதுதைவிட மோசமான ஷிர்க் எதுவுமில்லை.
இதை கருத்துவணக்கவாதிகள் உணர்வார்களா? அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இருக்குமா தெரியவில்லை, காரில் கொண்டுபோகும் கள்ள நோட்டுக்களை மறைத்துவிடலாம். கியாமத்திலும் கூட வரும் கருத்து ஷிர்க்கை என்ன செய்ய முடியும்?
நாகூர் ரூமி, எழுத்தாளர்.