‘மக்கள் நலக் கூட்டணியை உடைக்க முயல்கிறாரா ரவிக்குமார்?’

அ.மார்க்ஸ்

a marx
அ.மார்க்ஸ்

நான் எதிர்பார்த்தது போல மக்கள் நலக் கூட்டணியைச் சிதைக்கும் வேலையை ரவிக்குமார் தொடங்கிவிட்டது தெரிகிறது.

தேர்தலுக்குப் பின் ஏதோ ஒரு அரசியல் சூழலில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வரும் வாய்ப்பிருந்து யார் முதல்வர் எனக் கேள்வி எழுந்தால் நிச்சயமாக அந்தத் தகுதி தொல்.திருமாவளவனுக்கு உண்டு என்பதில் எனக்கெல்லாம் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை.

ஆனால் ஒரு கூட்டணி உருவாகி அதில் முதல்வர் வேட்பாளர் என யாரையும் அறிவிப்பதில்லை எனவும் முடிவானபின், கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக இருப்பவர் வெளிப்படையாக இப்படி ஒரு விவாதத்தைத் துவக்கி இருப்பது எப்படிச் சரியாக இருக்கும்?

தொல்.திருமாவளவன் அவர்களே நல்லகண்ணு போன்றோரே முதல்வராக வேண்டும் என்றெல்லாம் பெருந்தன்மையாகச் சொல்லிக் கொண்டிருக்கும்போது இப்படி ஒரு விவாதத்தை இந்த நேரத்தில் ரவிக்குமார் கிளப்பி இருப்பதன் நோக்கமென்ன?
சிண்டு முடிய நினைக்கும் தொலைக்காட்சிகள் இதை இப்போது விவாதமாக்கியுள்ளன.ஏதோ முதல்வர் யார் என்பதில் ம.ந.கூவுக்குள் பூசல் உள்ளது போல இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்கின்றன. தவிர்க்க இயலாமல் இந்த விவாதங்களில் வி.சி.க சார்பாக பங்கேற்பவர்கள் இ்தை ஆதரித்துப் பேச வேண்டிய நிலையும், மற்ற மூன்று கட்சிக்காரர்களும் அது பின்னால் கூடித் தீர்மானிக்க வேண்டியது எனப் பேச வேண்டிய நிலையும் இப்போது ஏற்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு ம.ந.கூவுக்குள் தேர்தலுக்கு முன்பே பூசல் தொடங்கிவிட்டது என்கிற கருத்து இப்படி வெற்றிகரமாக உருவாக்கப்படுகிறது.

இந்தக் கருத்தை சிந்தனைச்செல்வன் அவர்களோ, பொருளாளர் யூசுஃப் அவர்களோ, இல்லை ஆளூர் ஷா நவாஸ் போன்றோரோ முன்வைத்திருந்தால் யாருக்கும் இந்தச் சந்தேகம் எழுந்திருக்காது. கட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் இப்படி ஒரு விவாதத்தை இந்த நேரத்தில் எழுப்புவது தேவையில்லை. இதை வெளிப்படையாக முன்வைக்காமல் கூட்டணிக்குள் பேசியிருக்கலாம் என்கிற விமர்சனத்தோடு அது முடிந்திருக்கும். ஆனால் ரவிகுமார் இப்படி ஒரு விவாதத்தைக் கிளப்பியுள்ளது கூட்டணியை உடைக்கும் முயற்சி என்கிற நியாயமான ஐயத்தை ஏற்படுத்துகிறது.

1.ஏனெனில் அ.தி.மு.க கூட்டணியில் நின்று வெற்றி பெற்ற வி.சி.கவை திமுக பக்கம் இழுத்துச் சென்றதில் ரவிக்குமாரின் பங்கு பெரிது என்பது ஊரறிந்த இரகசியம். இதனால் அதிமுகவின் கதவு விசிகவுக்கு நிரந்தரமாகச் சாத்தப்பட்டுவிட்டது மட்டுமல்ல, திமுகவிற்குள்ளும் பேரம் பேசும் வலிமையையும் விசிக இழக்க நேரிட்டது. இது குறித்து கட்சி அணிகளுக்கு வருத்தமுண்டு.

  1. மக்கள் நலக் கூட்டணி தொடங்கிய பின்னும் கூட ரவிக்குமார் ஸ்டாலினுடன் நெருக்கமாக உறவைப் பேணுவது குறித்து சில பத்திரிகை நண்பர்கள் கூறினர். இது ஒரு சாதாரண மரியாதை நிமித்தமான உறவு அல்ல என்பதையும் அவர்கள் குறிப்பிட்டனர். இது குறித்து முன்பொருமுறை நான் பதிவிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

இப்படியான ஒரு சூழலில் ரவிக்குமார் இப்படி ஒரு சர்ச்சையைக் கிளப்பி விட்டது மக்கள் நலக் கூட்டணியில் அக்கறை உள்ளவர்களுக்கு வேதனை அளிக்கிறது. மக்கள் நலக் கூட்டணியில் உள்ளவர்கள் பொறுமையுடன் இதை அணுக வேண்டும்.

இரண்டு ஊழல் கட்சிகளுக்கு மாற்றாக மிக்க நம்பிக்கையோடு மேலெழுந்து வரும் ம.ந.கூ எனும் இளந்தளிரை எந்த விதத்திலும் பலவீனமாக்கும் முயற்சிகளை திருமா, ஜி.ஆர், முத்தரசன், வைகோ ஆகியோர் அனுமதிக்கக் கூடாது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.