#விவாதம்: ஜம்மு காஷ்மீரில் பண்டிட்டுகள் குடியேறிகளே!

நரேன் ராஜகோபாலன் 
நரேன் ராஜகோபாலன்
நரேன் ராஜகோபாலன்

வழக்கமாக சிறுபான்மையினரின் மீதான வன்கொடுமைகளுக்கு நாம் காவிக் கோஷ்டிக் கும்பலைக் கைக்காட்டும்போது அவர்கள் முன்வைக்கும் ஒரு சம்பவம் – கஷ்மீரி பண்டிட்கள் மீதான 90களின் தாக்குதல். இதை மட்டுமே சொல்லிக் கொண்டே இன்று வரை, செக்யூலரிசம் பேசும் எல்லோரையும் pseudo sikular, minority appeasement என இழிவுப்படுத்தி உளறுவதையே தொழிலாகக் கொண்டவர்கள்.

நமக்கு பள்ளிப்பாடங்களில் சொல்லப்பட்ட கஷ்மீர் கதை இது தான். பிரிவினையின் போது அங்கே ஹரி சிங் என்றொரு ஹிந்து ராஜா இருந்தார். பெரும்பான்மை இஸ்லாமியர்கள் இருந்த சமஸ்தானத்தை அவர் இந்தியாவோடு இணைக்க விரும்பினார். கஷ்மீரிகளில் ஒரு குழு தனியாக இருக்க விரும்பியும், இன்னொரு குழு பாகிஸ்தானுக்கு போகவும் விரும்பியது. இரும்பு மனிதர் படேலின் நடவடிக்கைகளால் தான் கஷ்மீர் இந்தியாவில் இணைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை இந்தியாவுக்கு வடக்கே தலைவலி. மேட்டர் ஒவர்.

அடிப்படையில் ஒரு முக்கியமான கேள்வியை சாய்ஸில் விட்டார்கள். ஜம்மு ஹிந்து பெரும்பான்மையோடு 1947-இல் இருந்ததா? வரலாற்று ரீதியான, ஆதாரப்பூர்வமான பதில்: இல்லை.

அது இஸ்லாமியர்கள் பெரும்பான்மை ஊராக இருந்தது. மார்ச் 1947-இல் ஒரு கலவரம் நடக்கிறது. இந்தியாவிற்கு ஆகஸ்டில் சுதந்திரம் கிடைக்கிறது. ஆகஸ்ட் – அக்டோபர் 1947ல் பிரிவினையையொட்டி மிகப் பெரிய இனப்படுகொலை நடக்கிறது. ஜம்முவில் இருந்த பத்து இலட்சம் இஸ்லாமியர்கள் இடம் மாற்றப்படுகிறார்கள். 2.5 – 3 இலட்சம் இஸ்லாமியர்கள் கொல்லப்படுகிறார்கள். ஹரி சிங்கின் ஹிந்து ஆட்சிக்கு தோதான தோக்ரா ஹிந்து காவலர்கள் இஸ்லாமியர்களின் மீது தாக்குதல் நடத்தி, ethnic cleansingனை முன் நடத்தி அங்கே ஹிந்துக்களை குடி வைக்கிறார்கள். இப்படியாக ஆரம்பிக்கிறது ஜம்முவின் ஹிந்து பெரும்பான்மை சமூகம்.

அந்த சமூகம் தான் 45 வருடங்களுக்குப் பிறகு கஷ்மீர் அடிப்படைவாதிகள் என்று இந்தியா சொல்லும் ‘ஆசாதி கஷ்மீர்’ ஆட்களால் படுகொலை செய்யப்பட்டு, விரட்டியடிக்கப்படுகிறது. இது தான் கஷ்மீர் பண்டிட்டுகளின் சோகக்கதை. (இது 150 சொற்களில் சுருக்கப்பட்ட வரலாறு. ஆனால் இதை முழுமையாக காரண காரியங்களோடு ஆராய கஷ்மீரின் வரலாறு, ஹிந்து ராஜ்ய வரலாறு, இஸ்லாமிய ஆழம், ஆசாதி கஷ்மீர் என 30 – 40 பக்கங்களுக்கு போகும். அதெல்லாம் 2016 தேர்தல் முடிந்து வெட்டியாக இருக்கும்போது வெட்டிக்கொண்டு மாள்வோம்)

40 வருடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் இருப்பதனாலேயே அந்த இடம் ஒரு இனத்துக்கு சொந்தமாகுமென்றால், செளகார்பேட்டையை ராஜஸ்தானோடும், ஜி.பி ரோட்டினை ஹரியானாவோடும், தி.நகரை ஆந்திராவோடும், கீழ்ப்பாக்கத்தை திருவனந்தபுரத்தோடும் தான் இணைக்க வேண்டும்.

கஷ்மீர் பண்டிட்களை விரட்டியடித்ததை நான் நியாயப்படுத்த மாட்டேன். அவர்களுக்கான மரியாதையையும், இடத்தையும் வழங்குதல் தான் நியாயம். அதே சமயத்தில் கஷ்மீர் பண்டிட்களில் பெரும்பாலானவர்களே அங்கே வந்தேறிகள் என்கிற வரலாற்று உண்மையும் முக்கியம். வரலாற்றை திரிப்பதென்பது காவிக் கோஷ்டிகளுக்கு கைவந்த கலை. அதில் இந்த வரலாற்றுப் பார்வை மிக முக்கியம்.

Trivia: அந்த கால வழக்கப்படி ஹரி சிங்கிற்கு நான்கு மனைவிகள். அதில் நான்காவது மனைவியான மகாராணி தாரா தேவிக்கு ஒரு மகன். அந்த மகன் தான் பின்னாளில் காங்கிரஸில் ராஜ்ய சபா எம்.பியாக இருந்த கரண் சிங்.

நரேன் ராஜகோபாலன், அரசியல்-பொருளாதார விமர்சகர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.