ஸ்டாலின் ராஜாங்கம்

கடலூர் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு சாதிகளை கணக்கெடுத்து இரண்டாகப் பிரித்து ஒரு மாவட்ட பொறுப்பை வன்னியருக்கு கொடுத்து அவர்கள் கோபப்படாமல் பார்த்துவிட்டு தான்,மற்றொரு மாவட்ட பொறுப்பை தலித் ஒருவருக்கு கொடுத்திருக்கிறார்கள்.இதேபோல மற்ற மாவட்டங்களின் பொறுப்புகளை தீர்மானிக்கிற போது தலித்துகளை திருப்திப்படுத்த வேண்டுமென்று இவர்களால் யோசிக்க முடிவதில்லையே ஏன்?
60க்கும் மேற்பட்ட மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருப்பதாக நினைக்கிறேன்.இவற்றில் பெரும்பான்மையாக உள்ள இரண்டு வடமாவட்டங்களில் வாய்ப்பளிக்க முடிந்த இக்கட்சி, மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் தலித்துகளை மாவட்ட செயலாளர் ஆக்கும் துணிச்சலை பெற்றிருக்கிறதா? சமூக நீதி பற்றி உரிமை பாராட்டிக்கொள்ளும் இவர்கள் மாவட்டபொறுப்புகளில் கூட இட ஒதுக்கீட்டை பின்பற்றுவதில்லையே?
கட்சி நிர்வாக பொறுப்புகளை தாண்டி உயர் பொறுப்புகளில் தேவர் சாதியினர் இல்லையென்பதால்,அதிமுகவை எதிர்கொள்ளும் பொருட்டு (போட்டி இப்படி தான் நடக்கிறது)இப்போது ஐ. பெரியசாமியை துணை பொதுச்செயலாளர் ஆக்கியிருக்கிறார் புரட்சித்’தளபதி’ஸ்டாலின்.இதே தளபதி(?)தான் தேவர் ஜெயந்தி வந்தபோது நமக்கு நாமே பயணத்தை இடையில் விட்டுவிட்டு தென்மாவட்டம் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றார்.இதே வழிமுறையை தலித் சாதிகள் விசயத்தில் கடைபிடிப்பதில்லையே.’தளபதி’தலித் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை என்பதை இவற்றோடெல்லாம் சேர்த்துதான் பார்க்க வேண்டும்.
ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர், தலித்திய ஆய்வாளர்.
தொடர்புக்கு: stalinrajangam@gmail.com
ஃ பேஸ்புக் கில் ஒருவர் பகிரும் நிலைத் தகவலை அப்படியே எடுத்துப் பகிர , தனி வலை தளம் எதற்கு நந்தினி. இதை நீங்கள் உங்கள் ஃ பேஸ்புக் ஐடி மூலம் பகிர்தலாகவே (FB share) செய்யலாமே.
வரும் காலங்களில், அந்த நிலைத் தகவல் குறித்த உங்கள் பார்வை யை 4 வரிகளேனும் எழுதலாமே மு.வி.நந்தினி
LikeLike
காஞ்சி மாவட்டத்தில் சுந்தருகுக் கொடுத்து இருக்கிறார்களே. மேலும் தலித் பரிதி இளம் வழுதிக்கு துணைப் பொதுச் செயலர் பதவி வழங்கினர், தலித் தங்கவேலு விற்கு மாநிலங்கள் அவை உறுப்பினர்..
LikeLike