செக்ஸை பொருத்த வரை ஆண் கற்பிப்பவனாகவும், பெண் கற்றுக்கொள்பவளாகவும்தான் இருக்க வேண்டும்.
கற்பிப்பவளாக கூட இருக்க வேண்டாம், செக்ஸ் பற்றி அவள் பேசினால் எத்தனை ஆண்களால் ஜீரணித்துக்கொள்ள முடிகிறது ??
அதிலும் மனைவி உடலுறவைப் பற்றி டிஸ்கஸ் செய்தால் “செத்தாண்டா சேகரு” கதைதான். அவன் முதல் யோசனை ‘இதை யார் இவளுக்கு சொல்லியிருப்பார்கள்?’ என்பதாகத்தான் இருக்கும். செக்ஸ் பற்றிய கனவுகளையும், கருத்துகளையும் பெண் வெளிப்படுத்தாமல் இருக்கும் வரை ஆண்கள் சிங்கங்கள்தான்.
அதிலும் தனக்கு செக்ஸ் பற்றி எதுவும் தெரியாது என்று பொய் சொல்லும் பெண்களுக்கு எப்போதும் மவுஸுதான். முட்டாள் ஆண்கள்.
இன்னும் பெரும்பாலோர் வீடுகளில், மனைவிக்கு செக்ஸ் தேவையாக இருக்கும்போது அவள் வெளிப்படையாக கேட்கத்தயங்குவாள். இறுக்கமாகவே நடந்து கொள்வாள். உம்மென்று இருப்பது, தேவையில்லாமல் எறிந்து விழுவது ..இப்படி. அதை புரிந்து கொண்டாலும் வேண்டுமென்றே அவளை அலைய விட்டு வேடிக்கை பார்க்கும் ஆண்கள்தான் அதிகம்.
இதுவே அவனுக்கு செக்ஸ் தேவையாக இருக்கும்பட்சத்தில் மனைவி சட்டை செய்யாமல் நடந்துக்கொண்டால், தன் ஆண்மையவே அவள் இழிவு படுத்திவிட்டதாக நினைத்துக்கொள்வான்.
உடலுறவின் போது மனைவி டெம்ப்ளேட்டாக உணர்வுகளை வெளிப்படுத்துவாள். அவள் உண்மையில் இன்புற்று வெளிப்படுத்தும் ஆனந்த கூப்பாடுகளை கேட்டதும் இங்கு பல ஆண்களுக்கும் டொய்ங் ஆகிவிடும் போல ..