உயிர்பெறும் தேசிய ஜனநாயக கூட்டணி: தேமுதிக, பாமக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதாக டைம் ஆஃப் இந்தியா செய்தி!

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு புத்துயிரூட்டப்பட்டிருப்பதாகவும், பா.ம.க.வுக்கு 70 இடங்களையும், தே.மு.தி.க.வுக்கு 113 இடங்களையும் ஒதுக்க பாரதிய ஜனதா முன்வந்திருப்பதாகவும், மீதமுள்ள இடங்களில் அக்கட்சி போட்டியிடவுள்ளதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

 

இந்தச் செய்தி குறித்து மறுப்பு வெளியிட்டுள்ளது பாமக. பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவதன் மூலம் பா.ம.க மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை குலைக்க முடியாது; பா.ம.க. ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முடியாது;  பாட்டாளி மக்கள் கட்சியின் வெற்றி வாய்ப்பை தடுக்க முடியாது என்று உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

2016 தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளர் குறித்த பா.ம.க.வின் முடிவை ஏற்றுக்கொள்ளும் அ.தி.மு.க., தி.மு.க. அல்லாத எந்த கட்சியையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள பா.ம.க. தயாராக இருக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை பா.ம.க. தான் தலைமையேற்று நடத்தும். பா.ம.க. தான் கூட்டணிக்கு தலைமையேற்கும். இது உறுதி. எனவே, தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் தவறாக செய்திகளை ஊடகங்கள் வெளியிட வேண்டாம்” என்று கூறியிருக்கிறார்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பத்திரிகையாளர் கதிர்வேலின் பதிவு…

தானாய் எல்லாம் மாறும் என்பது…
—————————————————

தேமுதிக 113

பா ம க 70

பி ஜே பி 51

மொத்தம் 234.

இன்னும் கட்சிகள் வந்தால் பிஜேபி தன் கோட்டாவில் இருந்து கொடுக்கும்.

இப்படி பேரம் முடிந்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தலைப்பு செய்தி. ஜெயா மேனன் சீனியர் நிருபர். நெருப்பில்லாமல் புகைக்க மாட்டார்.

கேப்டனின் மச்சான் சுதீஷ், பிஜேபி சீஃப் அமித் ஷா டெல்லியில் பேசி உடன்பட்டதாக சொல்கிறது செய்தி. தேர்தல் செலவுக்கு பிஜேபி எவ்வளவு கொடுக்கும் என்பது மட்டும் முடிவாகவில்லையாம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு ஏற்படுத்திய கூட்டணியை அப்படியே தக்க வைத்துக் கொள்வது பிஜேபியின் திட்டம்.

ஜெயலலிதா விருப்பமும் அதுதான்.

மக்கள் நல கூட்டணியில் நல்லவர்கள் இருக்கிறார்கள் என்கிறார் விஜயகாந்த்.

இன்னொரு பக்கம் பிஜேபி தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள அமித் ஷாவுக்கு விஜயகாந்த் வாழ்த்து சொல்கிறார்.

அவர் இப்படி எல்லாம் செய்வது திமுகவை பயமுறுத்தி அதிக சீட் வாங்கதான் என்று ஸ்டாலின் நினைக்கிறார்.

நம்மகிட்டதான் வந்தாகணும்; ரொம்ப தொங்க வேண்டாம் என்று அறிவாலயத்தில் சொன்னாராம்.

கேப்டனை பற்றி தளபதிக்கு தெரிந்தது அவ்வளவுதான்.

அம்மாவுக்கு இவர்கள் எல்லோரை பற்றியும் அதிகமாக தெரியும்.

இந்த தடவை எதிர்ப்பு ஓட்டு அதிகம் என்பது தெரியும். அதை பிரித்தால்தான் நாம் திரும்ப வர முடியும் என்பது தெரியும்.

அது தானாக நடக்கும் என்று அவர் மனப்பால் குடிக்கவில்லை. ஆறு மாதங்கள் முன்பே வேலையை ஆரம்பித்து விட்டார். பலன் கிடைப்பதை பார்த்தும் வருகிறார்.

மதுரையில் மநகூ மாநாட்டுக்கு மாபெரும் கூட்டம் என செய்தி கிடைத்தபோது அதிகம் மகிழ்ந்தவர் அம்மா.

அமித் ஷா, விஜயகாந்த், ராமதாஸ் தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்போது அதிகம் மகிழ போவதும் அம்மா.

ஈகோவை எப்போது இறக்கி வைக்க வேண்டும் என்று அம்மாவுக்கு தெரிந்திருக்கிறது.

திமுகவை பார்த்தால் பாவமாக இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.