கோவை வந்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
நடிகர் ரஜினிகாந்துக்கு பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர் “நடிகர் ரஜினிகாந்த்துக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ரஜினி சிறந்த நடிகர். தலைமுறை தலைமுறையாக அவரது நடிப்பை மக்கள் ரசித்து வருகிறார்கள். வருங்கால சந்ததியினரும் அவரது நடிப்பை ரசிக்கிறார்கள். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதரும் ஆவார். அவருக்கு விருது கொடுப்பதால் அந்த விருதுக்குத்தான் பெருமை” என்று தெரிவித்தார்.