மதுரை மக்கள் நலக் கூட்டணி மாநாட்டில் திருமா என்னதான் பேசினார்?

மதுரையை அடுத்த ஒத்தக்கடையில், மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் சுதாகர் ரெட்டி, அக்கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய திருமாவளவனின் உரையை சமூக ஊடகங்களில் ஒட்டி சர்ச்சைகள் எழுந்துள்ளன.
பிரபா அழகர்

மதுரை மாநாட்டில் திருமா பேசிய உரையை கேட்டேன் .. “தமிழகத்தில் ஊழல் புற்று வளர்ந்துவிட்டது. அந்த புற்றில் கட்டுவிரியன் குடியிருக்கிறது. அந்த கட்டுவிரியனை விரட்டிவிட்டு நான் வருகிறேன் என்கிறது ஒரு கண்ணாடிவிரியன்.” – இதுதான் அவர் பேசியது. இதில் என்ன தவறு இருக்கிறது என்று திமுக நண்பர்கள் உணர்ச்சிவசப்பட்டு வசைபாடுகிறார்கள் என்று தெரியவில்லை.

ஊழல் என்ற அளவுகோலை வைத்துப்பார்த்தால் அதிமுகவிற்கு மாற்று திமுக என்று சொல்லமுடியுமா? திருமா பேசியதில் தவறெதுவும் இருப்பதாக தெரியவில்லை. இந்த சந்தர்ப்பத்தில் திமுகவினர் புத்திசாலித்தனமாக அடக்கிவாசிப்பது நல்லது.

கவிதா சொர்ணவல்லி

கருணாநிதியை கட்டுவிரியனோ / கண்ணாடி விரியன்னோ / திருமா விமர்சனம் பண்ணினாராம். உடனே திமுக தோழர்கள் எல்லாம் பொங்கி எழுந்து திருமாவ பதில் விமர்சனம்… இல்ல இல்ல…. ஆபாச பதிலா எழுதிட்டு இருக்காங்க.

அதுல ஒரு தோழர் “காம கொடூரன் திருமா”ன்னு எழுதிருக்கார். ஏங்க தோழர், குமுதம் ரிப்போர்டர்ல பெரியார் -மணியம்மை மாதிரி…. கலைஞர் படம் போட்டு ஒரு கட்டுரை வந்துச்சே. அதெல்லாம் நியாவகம் இருக்குங்கதான உங்களுக்கு.

இதுக்கு மேல போய் “தலித்துகளை குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சோம்” அப்படின்னு ஒரு வெளிநாட்டு பொறுக்கி திமுக தொண்டர் எழுதிருக்கு.

ஆமாமா. இலங்கைக்கு எதிராக, தமிழக மாணவர்கள், கோயம்பேடுல போராட்டம் நடத்தினப்ப திருமா மூஞ்சிக்கு பின்னாடி திமுக ஆட்களை அனுப்பி வச்சப்ப “தலித்தை குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சது தெரியல”.

நீங்க வழிச்சு தின்ன ஸ்பெக்ட்ரம் பணத்துக்காக, விசிக கேவலபட்டப்ப “தலித்தை குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சது தெரில”. இப்ப மட்டும் தெரியுதா ???

விமர்சனத்தை விமர்சனமா பண்ணுங்க தோழர்ஸ்.

மதிமுகவின் சில, பல மாவட்ட செயலாளர்களை திமுக தன் பக்கம் இழுத்தது அரசியல் ராஜதந்திர ரீதியில் மோசமான கூட்டணி அரசியலில் பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம். (இதனால் மதிமுக இழக்க ஒன்றும் இல்லை,ஆனால் திமுகவுக்கு என்ன பெரிய நன்மை) அதன் விளைவுதான் மக்கள் நலக் கூட்டணி வலுவாக இறுகிச் செல்கிறது. விளைவு, விஜயகாந்திற்கு மேலும் மேலும் சந்தை முக்கியத்துவம் அதிகரித்துச் செல்வதோடு. பேர வலிமையும் கூடுகிறது. இப்போது, விஜயகாந்துக்கு கூட்டணி வைத்தாலும் பணம், வைக்கா விட்டாலும் பணம் வென்றாலும் பணம், தோற்றாலும் பணம் ஆனால் திமுகவுக்கு வென்றே ஆக வேண்டிய நிர்பந்தம் அந்த நிர்பந்தத்தில் இருந்தே அது விஜயகாந்திடம் தொங்கிக் கொண்டிருக்கிறது. இது பலவீனமான ஆட்டம்!

திரு.வைகோ சொன்ன நரிக்கதை…

மக்கள் நலக்கூட்டியக்கத்தை நாங்கள் ஆரம்பித்தபோது, அது தேறாது… கரை சேராது என்று சொன்னார்கள். கூட்டணி உடைந்துவிடும் என்றார்கள். நான் 3-ம் வகுப்பு படித்தபோது, பாடத்தில் வந்த ஒரு கதை தான் நினைவுக்கு வருகிறது. நான்கு காளைகள் இருந்தன. அவை ஒன்று சேர்ந்து இருந்ததால் நல்ல பலத்துடன் இருந்தன. ஒரு சிங்கத்தின் கண்ணில் அந்த காளைகள் பட்டன. காளைகளை கொல்ல வந்த சிங்கத்தால், அந்த காளைகள் ஒற்றுமையாக இருந்ததால், சிங்கத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிங்கம் சோர்ந்துவிட்டது. அப்போது, கிழட்டு நரி ஒன்று சிங்கத்திடம் போய் பேசியது. அந்தக் காளைகளைப் பிரிப்பதற்கு முயற்சித்தது. அந்த கிழட்டு நரிக்கு இதே வேலை. ஆனால், காளைகளைப் பிரிக்கும் முயற்சி பலிக்காது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.