பத்ம விருது மறுப்பு:ஜெமோவின் தனிமனித சுதந்திரத்தை சிதைக்கிறார்களா இணைய விமர்சகர்கள்?…

குமரகுருபரன்  ஜெயராமன்

Kumar
குமரகுருபரன்

இது ஜெயமோகனுக்காக எழுதப்படும் கட்டுரை அல்ல. எனினும் அவரும் ஒரு தமிழ் எழுத்தாளரே என்கிற உண்மையின் அடிப்படையில் இதை அவருக்காக எழுதப்படும் ஒன்று எனவும் கொள்ளலாம்.

தூய இலக்கியம் என்கிற ஒன்று இன்னமும் இருக்கிறது,ஒவ்வொரு எழுத்தாளனும் தனது வாழ் லட்சியமாக அதை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறான் எம்மொழியிலும்.

தன்னுடைய முதல் வரியை எழுதும் எவனும் விருதைப் பற்றி யோசிப்பதில்லை. கடைசி வரியின் போதும்.

மூன்று தளங்கள் சாத்தியப் படுகின்றன,ஒரு எழுத்தாளனுக்கு,அவனது எழுதும் சூழலில்.

அது

தன் எழுத்து – அடிப்படை இயங்கு தளம் – கதை, கட்டுரை, அல்லது கவிதை
தன் கருத்து – மேற்சொன்னது தவிர்த்து இயங்கும் தளம்
தன் கடமை – மேற்சொன்ன இவ்விரு காரணங்களின் பொருட்டும் கிடைத்திருக்கிற ஒரு சமூக பொறுப்பை அவர் எப்படி கையாளுகிறார் என்பது குறித்து.

எனினும் ஒரு விருது, மதிக்கத் தக்க விருதுகள் அளிக்கப் படுவதற்கு ஒரு அடிப்படை வேண்டும். அதில் முதலாவது அவரது படைப்புகள் மட்டுமே.

பத்ம விருது ஜெயமோகனுக்கு அளிக்கப்பட்டது,அதை அவர் மறுத்தது, இதைக் குறித்து இங்கு இணையத்தில் மிகப் பெரிய அநீதி அவருக்கு இழைக்கப் படுகிறதை நான் காண்கிறேன்.

உங்களுக்கு ஜெயமோகன் என்பவர் யார் ? என்பது குறித்த ஐயப்பாடுகள் எதுவெனிலும் இருக்கட்டும்.

அவர்

ஏழாம் உலகம் படைக்கும்போது
பின் தொடரும் நிழலின் குரல் கொண்டு வந்தபோது
காடு திறக்கும்போது
இரவு விழிக்கும்போது

நம்முடன் நம்மை இலக்கியத்தின் பால் காதல் கொள்கிற மனதாய் மாற்றுவதில் ஒரு துளியேனும் இருந்திருக்கிறார்.

அவரது டெஸ்ட்டிமோனியல்கள் – அது தந்த எழுச்சி.

இன்னமும் அன்றாடம் நம்முடன் உரையாடிக் கொண்டிருக்கிற, நம்மை அவரது புத்தகங்களை வாங்கியே ஆக வேண்டும் என்கிற வற்புறுத்தாத ஒரு மனிதனாய் இருக்கிறார்.

அவருக்கு நீங்கள் நினைக்கிற அளவுக்கு நிகழ் உலகம் தெரியாது. அவருக்கு மற்றவர்களை நாடி தன்னை அடிப்படை வசதிகளுடன் வைத்துக் கொள்ளக் கூட தெரியாது.அவருக்கு தனது திறமை சார்ந்த விஷயங்கள் தவிர்த்து வேறெதிலும் சம்பாதிக்கலாம் என்கிற கனவு கூட கிடையாது. அவர் லோகிததாஸ் என்னும் அரிய மலையாள கலைஞனுக்காக சென்னையில் வசதியற்ற இடமொன்றில் தங்கி வேலை பார்த்தது எனக்கு தெரியும். இன்று சினிமாவில் கிடைத்திருக்கிற இடத்தை அவர் மிக எளிதாகப் பெறவில்லை.

அவரது படங்கள் அநேகமாக சிறந்தவையாகவே இருந்திருக்கின்றன.

இப்போது என்ன, அவருக்கு ஒரு பத்ம விருது கொடுத்திருக்கிறார்கள். அவர் தன் அடிப்படையில் தனது செயல்பாட்டுக்கு தடை வராத அளவில் ஒரு முடிவு எடுத்திருக்கிறார்.

நான் இவ்வாறு புரிந்து கொள்கிறேன்,

கலாசார பண்பாட்டு முன் பெருமை முன் இலக்கிய வழமை சிற்பம் ஓவியம் கலை பாடல்கள் வரலாறு எதையும் முன்னெடுக்கும் தனது எழுத்துக்கு வெறும் மதத்தை மட்டுமே மேற்சொன்னவை சார்ந்து முன்னெடுக்கும் ஒரு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கப் பெறும் விருது ஒன்று தனது நுண்ணிய நிலைப்பாடு ஒன்று சீர்குலைக்கும் என்று நம்புகிறார்.

விருதை மறுக்கிறார்.

அவர் அவருக்கு வழங்கப்படும் விருதை மறுக்கிறார்.

இதில் இதைச் சார்ந்து இணையத்தில் வெளிப்படும் கருத்துகள் பலவையும் அடிப்படையாக ஒரு குற்றத்தை இழைக்கின்றன. அது ஒரு படைப்பாளியின் தனி மனித சுதந்திரத்தின் உள் புகுந்து கற்பழிப்பது.

கண்ணதாசனை அவன் என்ன அரசியல் கோக்குமாறு செய்திட்ட போதும் ஏற்றுக் கொண்டு அவன் அப்படித்தான் என்று முன்னிறுத்தி பெருமை செய்த சமூகம் நாம்.

என்ன நேர்ந்தது நமக்கு?

குமரகுருபரன், பத்திரிகையாளர்-எழுத்தாளர்.

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.