மனித கழிவுகளை அகற்ற உத்தரவிடுவதும் வன்கொடுமையே: தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களை பாதுகாக்கும் புதிய சட்டம் இன்று முதல் அமல்…

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இன மக்களுக்கு எதிராக வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு, கடுமையான தண்டனை வழங்க வழிவகை செய்யும் புதிய சட்டம் ஜனவரி 26-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இச்சட்ட திருத்த மசோதா பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டு, கடந்த டிசம்பரில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதல் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சட்டப் பிரிவுகள் என்னென்ன?:

*தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களை கட்டாயப்படுத்தி மொட்டையடிப்பது, மீசையை மழிப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் அவர்களது தன்மானத்துக்கு ஊறு விளைவிக்கும் நடவடிக்கைகள் இனி தண்டனைக்குரிய வன்கொடுமைகளாகக் கருதப்படும்.

*நீர்ப்பாசன உரிமை மறுப்பு, காலணிகளை அணிந்து செல்ல தடை விதிப்பது, இறந்து போன விலங்குகள் அல்லது மனித உடல்களை அப்புறப்படுத்துமாறு எஸ்.சி. / எஸ்.டி. இனத்தவரைக் கட்டாயப்படுத்துவது அல்லது புதைகுழி தோண்டுமாறு நிர்பந்தம் செய்வது போன்ற நடவடிக்கைகள் தண்டனைக்குரியவை.

*மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுத்துவது, பொருளாதார ரீதியாக அல்லது சமூக ரீதியாக எஸ்.சி. எஸ்.டி. மக்களை ஒதுக்கி வைப்பது, வீடு அல்லது கிராமத்தை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்துவது உள்ளிட்டவை வன்கொடுமை குற்றங்களாகக் கருதப்படும்.

*எஸ்.சி. / எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த பெண்களை பாலியல் தொழிலுக்குப் பயன்படுத்துவது, நகைகளை கழற்ற சொல்லி அவர்களை புண்படுத்துவது உள்ளிட்டவை கடும் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.

*குறிப்பிட்ட ஒரு வாக்காளருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது வாக்களிக்கக் கூடாது என தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினத்தவரைக் கட்டாயப்படுத்துவதும் தண்டனைக்குரிய குற்றமே.

*இவை மட்டுமல்லாமல், வன்கொடுமை வழக்குகளை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும், சிறப்பு அரசு வழக்குரைஞர்களை நியமித்துக் கொள்ளவும் புதிய சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மாதங்களில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்ற விதி இடம்பெற்றுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.