பத்மஸ்ரீ விருதை மறுத்தார் எழுத்தாளர் ஜெயமோகன்: அவதூறான விமர்சனங்களைத் தவிர்க்கவே இந்த முடிவெடுத்ததாக விளக்கம் …

கலை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு, வருடா வருடம் மத்திய அரசால்  வழங்கப்படும் பத்மஸ்ரீ விருதை, வேண்டாமென்று பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் மறுத்துள்ளார்.

இது பற்றி அவர் தனது வலைதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில் “பத்மஸ்ரீ” விருதுக்காக மணிரத்னம் உள்ளிட்ட பலர் தன்னை பரிந்துரை செய்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் ” இன்று (ஞாயிறு) மாலை ஆறரை மணிக்கு டெல்லியில் இருந்து கலாச்சாரத்துறை உயரதிகாரியான சௌகான் என்பவர் அழைத்து வரும் குடியரசுதினத்தில் தனக்கு பத்மஸ்ரீ அளிக்கப்படவிருப்பதாக அறிவித்தாக”  எழுதியுள்ளார்.

இதையடுத்து “சௌகானிடம், தனக்கு விருது வேண்டாம் என்று மறுத்ததாகவும்” ஜெயமோகன் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

பத்மஸ்ரீ விருதை வேண்டாமென்று மறுத்ததற்கான காரணமாக ஜெயமோகன் எழுதியுள்ள விளக்கத்தில் ”

கசப்பும் காழ்ப்புகளும் ஓங்கிய தமிழ்க் கருத்துச்சூழலில் திரிபுகளையும் அவதூறுகளையும் அவமதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் கடந்து, தாக்குதல்களையும் தாண்டி நின்று முப்பதாண்டுக்காலமாக மிகமெல்ல நான் உருவாக்கியிருப்பது என் தரப்பு. இவ்விருதால் அதன் நேர்மை கேள்விக்குரியதாகுமென்றால் அதை நான் தவிர்த்தே ஆகவேண்டும்

இவ்விருதை நான் ஏற்றுக்கொண்டால் என்னாகும்? அரசை அண்டி வாழும், அரசை மிரட்டி சுயலாபங்களை அடைந்து திரியும் ஒட்டுண்ணிகள் இதற்காகவே நான் பணியாற்றுகிறேன் என்பார்கள். தேசவிரோதக்கருத்துக்களுக்காக தரகுவேலை செய்பவர்கள், அதிகாரத் தரத்தரகர்களான அறிவுஜீவிகள் நானும் அவர்களைப்போன்றவனே என்பார்கள். அவர்களுக்கு எதிரான என் விமர்சனங்களை இதைக்கொண்டே எதிர்கொள்வார்கள். அந்த வாய்ப்பை நான் அளிக்கலாகாது, நான் கலைஞன். கலைஞன் மட்டுமே.” என்று ஜெயமோகன் திட்டவட்டமாகத்  தெரிவித்துள்ளார்.

விருதை மறுத்ததால், இதற்காக தன்னை பரிந்துரைத்த மற்றும் முயற்சி செய்த நண்பர்கள் வருந்துவார்கள் என்றும், மனைவி மாமனார் மாமியார் ஆகியோர் வருத்தத்தில்  இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள ஜெயமோகன் “இவ்விருது இத்தேசத்தின் அங்கீகாரம். இதைப்பெறுவதற்குரிய பங்களிப்பை ஆற்றியே இதைநோக்கி நான் சென்றிருக்கிறேன். அதை மறுப்பதென்பது என் அன்னை எனக்கு அளிக்கும் அன்புப்பொருள் ஒன்றை மறுப்பதே. பரவாயில்லை, அன்னை என்றால் புரிந்துகொள்வாள்” என்றும் கூறியுள்ளார்.

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.