#சர்ச்சை: வகாபிச சிந்தனையை வளர்க்கிறதா ஷிர்க் ஒழிப்பு மாநாடு?

தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் ‘ஷிர்க் ஒழிப்பு மாநாடு’ என்பது சிலை வழிபாட்டு முறைகளை ஒழித்து ‘தூய இஸ்லாம்’ திசையை நோக்கி தமிழ் முஸ்லிம்களை கொண்டு செல்லும் முயற்சி. வஹாபிசம், சலஃபிசம் போன்ற தீவிர சுன்னி இஸ்லாம் சிந்தனைகளின் விளைவுதான் இது. இந்த கோட்பாட்டை ஒட்டிதான் பாமியான் புத்தர் சிலைகளை தாலிபான்கள் வெடித்து நொறுக்கினார்கள். இதே கோட்பாட்டை ஒட்டிதான் ஐஎஸ்ஐஎஸ் கும்பல் சிரியா மற்றும் ஈராக் போன்ற தேசங்களில் உள்ள பழமையான இஸ்லாம் அல்லாத வரலாற்றுச் சின்னங்களை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இது மற்ற மதங்களுக்கு மட்டும் பிரச்சனை அல்ல. இந்த சிந்தனையாளர்கள் சூஃபிசம் மற்றும் ஷியா போன்ற இஸ்லாத்தின் உள்ளேயே இருக்கும் பிரிவுகளைக் கூட வெறுக்கிறார்கள். சூஃபி நம்பிக்கையாளர்கள் வழிபடும் தர்கா எனப்படும் இஸ்லாமிய துறவிகளின் சமாதிகள் கூட இந்த ‘ஷிர்க் ஒழிப்பின்’ கீழ் வரும். பாகிஸ்தானில் நிறைய பழமையான தர்காக்கள் அடித்து நொறுக்கப் பட்டதற்கும் இதே சிந்தனைதான் பயன்பட்டது.

sheirk

இதே திசையை நோக்கி தமிழ் முஸ்லிம்களை திருப்பும் ஜமாஅத்-தின் இந்த முயற்சி கவலையையும் பயத்தையும் உண்டு பண்ணுகிறது. பெரும்பான்மையாக முஸ்லிம்கள் மட்டுமே உள்ள தேசங்களிலேயே இந்த சிந்தனை கடும் வன்முறைகளை விளைவித்திருக்கிறது என்றால் இந்தியா மாதிரி தெருவுக்கு தெரு பத்து சிலைகளை வைத்து கும்பிட்டுக் கொண்டிருக்கும் தேசங்களில் எப்பேர்ப்பட்ட மத துவேஷங்களை இது உண்டு பண்ணும் என்று கற்பனை செய்யவே முடியவில்லை. ‘நாங்கள் தூய இஸ்லாத்தை பின்பற்றி உருவமில்லா இறைவனை மட்டுமே வழிபடுவோம்.’ என்று பிரகடனப் படுத்தும் உரிமை இந்த தீவிர சுன்னிகளுக்கு உண்டு. ஆனால் அதை உறுதி செய்ய அடுத்தவர் தர்காக்கள், கோயில்கள், சர்ச்சுகள் ஆகியவற்றை உடைப்போம் என்று கிளம்புவது ஆபத்தானது.

இந்த வகாபிச சிந்தனைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமை அரசுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழ் முஸ்லிம்களுக்கும் இருக்கிறது. இது நாள் வரை தீவிரவாத சிந்தனைகளுக்கு பெரிதும் இடம் கொடுக்காமல் காத்து வந்திருக்கும் இவர்கள் இந்த ‘ஷிர்க் ஒழிப்பு மாநாட்டையும்’ புறக்கணித்து தோல்வி அடைய செய்வார்கள் என்று நம்புவோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.