அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், 23 கேள்விகளுக்கு, பதில் கேட்கப்படுகிறது. # என்னா கேள்வியா இருக்கும்?
1. முதுகு எவ்வளவு தூரம் வளையும்?
2. ஒரு மணி நேரத்தில எத்தனை ஸ்டிக்கர்
ஒட்டமுடியும்?
3. “புரட்சித்தலைவி, இதயதெய்வம், கழக நிரந்தர பொதுச்செயலாளர், நிரந்தர முதல்வர், தங்கத்தாரகை, வருங்கால பாரத பிரதமர், அம்மா” இதை இடைவிடாம எத்தனை தடவை சொல்லமுடியும்?
4. காருக்கு பின்னாடி ஓடத்தெரியுமா?
5. வேன்-ல தொங்கத்தெரியுமா?
6. ஹெலிக்காப்டருக்கு பின்னாடியே பறக்கத்தெரியுமா?
7. மீடியாகாரங்களை கண்டா ஓடத்தெரியுமா?
8. 110 -ன்னா என்னன்னு தெரியுமா?
9. 1100-ன்னா என்னன்னு தெரியுமா?
10. 11000-ன்னா என்னன்னு தெரியுமா?
(புதுசா கொண்டுவருவம்யா…)
11. காவடி எடுக்கத் தெரியுமா?
12. தீ மிதிக்கத் தெரியுமா?
13. மண் சோறு சாப்பிடத் தெரியுமா?
14. அலகு குத்திட்டு அழுகாம இருக்கத் தெரியுமா?
15. கட்அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யத் தெரியுமா?
16. அடுத்தவங்க பேனரை டர்ர்ர்-ன்னு கிழிக்க தெரியுமா?
17. மினிஸ்டர் பதவி போச்சுன்னாலும் சிரிச்சிக்கிட்டே இருக்கத் தெரியுமா?
18. ஜெயிலுக்கு முன்னாடி நாள் கணக்கா உட்கார்த்திட்டு இருக்க முடியுமா?
19. டிவி விவாதத்துக்கு போயிட்டு வாயை மூடிட்டு இருக்க முடியுமா?
20. தரையில விழுந்து உருளத் தெரியுமா?
21. தாடி வளர்க்கத் தெரியுமா?
22. பதவியேற்கும் போது கதறிக் கதறி அழுகத் தெரியுமா?
23. இந்த கேள்விகளை எல்லாம் படிக்கத் தெரியுமா?
அண்ணே கடைசி கேள்வி சூப்பர்
LikeLike