ஹைதராபாத் பல்கலையில் மரணமடைந்த ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமூலா, தலித் அல்ல, அவர் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர் என்று தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் சமூக ஆர்வலர் பானுகோம்ஸ். இந்தப் பதிவுக்கு கடும் கண்டனங்கள் கிளம்பிய நிலையில் அவர் அந்தப் பதிவை நீக்கிவிட்டார். தலித்தாக இருந்தாலும் வேறு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர் இறுதிவரை போராடியது இந்துத்துவத்தை எதிர்த்துதான் என்பதை, பானு கோம்ஸ் போன்ற வலதுசாரிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என பலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கவிதா சொர்ணவல்லி
ஆர்.எஸ்.எஸ்.கும்பலின் இளைஞர் அமைப்பான ABVP -யுடன், தலித்தில்லை என்று Banu Gomes போன்ற அய்யர் புள்ளமார்களால், பச்சை பொய் பரப்படும், வீணாய் செத்து போன, அவன் தலித்தான் என்று என்று நான் நம்பும் ரோஹித் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறான்
ABVP-யின் பேனரை கிழித்தது தொடர்பாக இந்த வாக்குவாதம் தொடர்கிறது.
ABVP: எதுக்காக கிழிச்ச ?
ரோஹித்: அதில் இந்துத்துவாவும், ஆர்.எஸ்.எஸ்.வண்ணமும் இருக்கிறது. அதனால்தான் கிழித்தேன்.
ABVP: உன் வீட்டுல காவி கலர் இருந்தாலோ, உன் வீட்டு சேலையில் காவி கலர் இருந்தாலோ, அதை கிழிப்பியா ???
ரோஹித்: கண்டிப்பா கிழிப்பேன்.
ரோஹித் தலித்தாகவே இல்லாது இருக்கட்டும். அவனின் இந்தளவு தைரியமான இந்துத்துவ எதிர்ப்புக்காகவே அவனது மரணத்திற்கு விடை கேட்டு போராடுவோம்.
“தற்கொலை செய்து கொண்ட ரோஹித் ஒரு தலித் தே இல்லை. அவர் பிறப்பு சான்றிதழை செக் செய்து பார்த்ததில் அவர் ஆந்திரா ல ஓபிசி தான். அவர் தலித் என்று போடுவதற்கு முன்னால் அது உண்மைதானா என்று உறுதி செய்யுங்கள் ” என்று திருவாய் மலர்ந்தார் பிரபல சமூக ஆர்வலர்.
இவர் யார் என்றால், முன்பொருமுறை “இட ஒதுக்கீட்ல படிச்ச டாக்டர் கிட்ட ஊசி போட்டுக்க மாட்டேன் ” னு சொன்னாரே அதே சமூக ஆர்வலர் தான்.
போஸ்ட் போட்ட அரைமணி நேரத்தில அம்மையார் போட்ட தகவல் பொய் என்று தெரிந்தவுடன் கமுக்கமாக அந்த போஸ்ட்டை டெலீட்டிவிட்டார் அந்த சமூக ஆர்வலர்.
இந்த மாதிரி முந்திரிக்கொட்டைத்தனமா வன்மத்தை கொட்றதுக்கு முன்னாடி ஒன்னுக்கு ரெண்டு தடவை தகவலை உறுதி படுத்திட்டு போட்ருக்கலாம். பாஜக பண்டாரு தாத்ரேயா இமேஜ் பயங்கரமா டேமேஜ் ஆகிட்டு இருக்கறத பொறுக்க முடியாம அவசரப்பட்டு அவங்களே களம் எறங்கிட்டாங்க போல…!
அப்புறம் கடைசியா ஒண்ணு மேடம்! பிறப்பு சான்றிதழ் ல சாதி தெரியாது மேடம். அதுக்கு பேரு சாதி சான்றிதழ். தாலுகா ஆபீஸ் தாசில்தார் தருவாரு மேடம்.
– Sivasankaran Saravanan.
# இந்த சமூக ஆர்வலரை வெகுஜன ஊடகத்தில் அறிமுகம் செய்து வளர்த்துவிட்ட பெருமை புதியதலைமுறையை சாரும்
சோ வை போலவே அச்சு பிசகாமல் மோடிக்கும் லேடிக்கும் ஒரே நேரத்தில் சொம்படிப்பதில் கைதேர்ந்தவர் இந்த அம்மணி….
ஆரம்பத்தில் இவரின் முகநூல் பதிவுகள் எல்லாம் தன்னை ஒரு பொதுவுடைமை சித்தாந்தவாதியை போல் காட்டி கொள்வதாக இருந்தது…. அப்புறம் என்ன…. வழக்கம் போல சிகப்பு துண்டு சாயம் வெளுத்து காவியானது
