ஐரோப்பாவிலும்கூட அம்பேத்கரின் மூக்குக்கண்ணாடி மட்டும் அடிக்கடி உடைக்கப்படுகிறது!

இளங்கோ கிருஷ்ணன்

ஐரோப்பாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை வளாகத்தில் இரண்டு இந்தியத் தலைவர்களுக்கு சிலைகள் உள்ளன. ஒருவர் காந்தி, இன்னொருவர் அம்பேத்கர். இரண்டு சிலைகளுக்குமே உண்மையான மூக்குக்கண்ணாடி அணிவிக்கப்பட்டிருக்கும். இதில், அம்பேத்கரின் மூக்குக்கண்ணாடி மட்டும் அடிக்கடி உடைக்கப்படும். யார் இதைச் செய்கிறார்கள் என பல்கலைக்கழகத்தினர் கண்காணித்தபோது, இந்திய மாணவர்களில் ஒரு பிரிவினர் இதைச் செய்வதை அறிந்தனர். ஐரோப்பியர்களுக்கு புரியவே இல்லை. அம்பேத்கரும் அவர்கள் தேசத்தின் தலைவர்தான் ஏன் அவர் கண்ணாடி மட்டும் உடைகிறது என.

ஆனால், அம்பேத்கருக்கு தெளிவாகவே புரிந்திருந்தது இது அவர் தேசம் இல்லை என இங்கு அவரின் மக்களுக்கு மனிதர்கான மரியாதையே வழங்கப்பட்டதும் இல்லை, வழங்கப்பட போவதும் இல்லை என. அதனால்தான் அவர்கள் தனிநாடு கேட்டார்கள்.

கார்ல் சகானின் எழுத்துக்கள் எக்ஸ்ட்ரா டெரஸ்ரியல் எனும் பூமிக்கு வெளியே வசிக்கும் ஏலியன்ஸ் பற்றி அக்கறை கொண்டவை. தொலை தூர நட்சத்திரங்களில், அறிவார்த்தமும், அன்பும் நிறைந்த, எந்த மொழியையும் உடனே புரிந்துகொள்ளும், இந்த விண்ணையும் மண்ணையும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் நேசிக்கும் விநோத உயிர்கள் பற்றியவை. மேலும், தலித்துக்கள் ஒருவகையில் ஏலியன்ஸ்கள் போலத்தான் நடத்தப்படுகிறார்கள் இந்த நிலத்தில், இதனால் எல்லாம்தான் ரோஹித்துக்கு கார்ல் சகானை பிடித்திருக்கிறது போல…

ஒருமுறை ரமேஷ்பிரேதனிடம் அவரின் அயோனிகன் தொகுப்பு குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது பேச்சு கார்ல் சகானுக்குப் போனது…ரமேஷ் சொன்னார்… கார்ல் சகான், மானுட விடுதலையின் முழுமை அந்நியர்களான ஏலியன்ஸ்களை அறிந்துகொள்வதில் இருக்கிறது என்கிறார். இந்த நிலத்தில் மண்ணின் விடுதலையை மக்களின் விடுதலையை நேசிக்கும் ஒவ்வொருவருமே ஏலியன்ஸ்தான்… வள்ளலாரும், அம்பேத்கரும் ஏலியன்ஸ்தான் என்றார். சற்று உணர்ச்சிவசப்பட்ட பேச்சுதான். ஆனால், சிந்தித்துப் பாருங்கள் இந்த பூமியில் எல்லோரும் சமம் என்கிற மிக எளிய உண்மையை சொன்னதற்காக இதுவரை எத்தனை உயிர்கள் பழி வாங்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவு அடிப்படையான, இவ்வளவு எளிமையான உண்மையை நடைமுறை வாழ்வில் பாவிப்பவர்களை நாம் என்னென்ன சொற்களால் அசிங்கப்படுத்துகிறோம்… யுவராஜ்கள் தைரியமாக, சுதந்திரமாக நடமாடும் சமூகத்திற்கு விஷ்ணுப்ரியாக்களும் ரோஹித்களும் ஏலியன்ஸ்தானே…

இளங்கோ கிருஷ்ணன், எழுத்தாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.