நாகேந்திரகுமார் திலகவதி
அது அயல்நாட்டு பறையோ, உள்ளூர் பறையோ… எனக்கு எப்போதும் நல்ல ராகத்துடன் கூடிய தெறி அடி பாடல்கள் என்றால் கொள்ளைப் பிரியம்! இளையராஜா, ரஹ்மான், ஹாரிஸ், யுவன், விஜய், ஜெயமூர்த்தி இன்னும் பெயர் தெரியா எவ்வளவோ பேரை தேடி தேடி கேட்டு ரசித்திருக்கிறேன். ஆனாலும் ஒரு படத்தின் அனைத்து பாடல்களும் பிடித்த படம் எனக்கு எதுவென்றால் பூவேலி, சுக்ரன்தான். அதிலும் சுக்ரனை கணக்கு வழக்கு இல்லாமல் கேட்டு மூழ்கியிருக்கிறேன்.
அந்தவகையில் நான் மதிப்பு வைத்திருக்கும் விஜய் ஆண்டனியின் இசையில் “பாழாப்போன உலகத்திலே” (Glamour Song) எனும் பாடலும் என் ரசனைக்கு உகந்ததுதான்.
ஆனால் இந்த பாடலின் 2:18 நேரத்தில்
“கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான்..
தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்”
எனும் தற்குறித்தனமான வரிகள் வருகின்றன. இது இடஒதுக்கீடை கடைபிடிக்கும் இந்திய இறையாண்மையையே கேலி செய்வதாகும்; சமூக நீதி குறித்து மண்டையில் ஒரு மண்ணும் இல்லாத ஒரு பொறம்போக்கின் வரிகள்தான் இவை.
இந்த வரிகளை எழுதிய கழிசடைக்கோ, அனுமதித்த இயக்குனர் சசிக்கோ, பயன்படுத்திய விஜய் ஆண்டனிக்கோ மூளை எனும் அவயம் குறித்த கவனம் இல்லாமல் இருக்கலாம். ஒரு தயாரிப்பாளராக விஜய் ஆண்டனி தமது பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டும். வரிகள் நீக்கப்படவேண்டும்.
One thought on ““கோட்டாவுல சீட்ட வாங்கி டாக்டராகுறான் : தப்பு தப்பா ஊசி போட்டு சாவடிக்குறான்” விஜய் ஆண்டனி, இயக்குனர் சசிக்கு எதிராக எழும் கண்டனங்கள்”