மோடி அரசு சாதனை: இந்திய தொழில் உற்பத்தி மன்மோகன் அரசைவிட ’ரொம்ப’ கீழே இறங்கியது!

பாஜக பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட நரேந்திர மோடி பிரச்சாரங்களில் ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியா அனைத்து  துறையிலும் அசுர வளர்ச்சிக் காணும்’ என்று முழங்கினார். அதை நம்பிய வாக்காளர்கள், அவருக்கு அமோகமாக ஆதரவு தந்து ஆட்சியில் அமரவைத்தார்கள். ஆனால் கடந்த ஒன்றே முக்கால் வருட ஆட்சிக்காலத்தில் இந்திய வளர்ச்சியில் பின்னோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது. பங்குச் சந்தைகள் இறங்கு முகத்தில் இருக்கின்றன.  பணவீக்க விகிதம் தொடர்ந்து சரிவில் இருக்கிறது. இப்போது இந்திய தொழில் உற்பத்தில் 2011-ஆம் ஆண்டைவிட கீழே இறங்கி இருக்கிறது.

இது குறித்து பேராசிரியர் அருணன் இப்படிச் சொல்கிறார்…

மோடி ஆட்சியில் தொழில் உற்பத்தி சரிந்தது !

“மோடி நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறார் ” என்று பாஜக வினரும் அவர்களது சமூக ஆர்வலர்களும் பீற்றிக் கொள்வார்கள். நடப்போ வேறு மாதிரியாக உள்ளது. தொழில் துறையில் ஏற்கெனவே இருந்த வளர்ச்சியும் குறைந்து போனது. தொழில் உற்பத்தியானது 3.2% குறைந்து போனது என்று இந்து ஏடு தகவல் தந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத படுமோசமான நிலை இது என்கிறது அதே ஏடு. அதிலும் நேரடி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 22 தொழில் தொகுதிகளில் 17ல் “எதிர்மறை வளர்ச்சி” அதாவது
சரிவு ஏற்பட்டுள்ளது என்கிறது. இதனினும் அதிர்ச்சிகரமான விஷயம் மூலதனப் பொருட்கள் உற்பத்தியானது 24.4% குறைந்து போனது. இதன் அர்த்தம் அடிப்படைத் தேவைப்பொருட்களுக்கு தட்டுப்பாடு வரப்போகிறது ,அது முழுப் பொருளாதாரத்தையும் நசுக்கப் போகிறது என்பதாகும்; அதானி, அம்பானி போன்ற ஒரு சில பெரு முதலாளிகளை மட்டும் நம்பி லட்சக்கணக்கான குறு -சிறு -நடுத்தர தொழில் முனைவோரைப் புறந்தள்ளுகிற மோடிப் பொருளாதாரம் நாட்டைத் தெருக்கோடியில் நிறுத்தப் போகிறது என்பதாகும்”.

இந்தச் சரிவிற்கான காரணமாக, சென்னை வெள்ளத்தை சுட்டிக்காட்டுகிறது மத்திய அரசு. சென்னை வெள்ளம் மட்டும் ஐந்தாண்டுக்கு முந்தைய சரிவுக்குக் கொண்டுபோய் விடாது என்பதை எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

முகப்புப் படத்தில்: பிரதமர் நரேந்திர மோடியுடன் அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.