பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இடது பக்கம் செயல்படாமல் இருக்கிறார் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன்; ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறார். நீங்கள் நினைத்தால் அவரை மேலும் எழுதவைக்கலாம்!

நோயுற்றிருக்கும் எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு
நலநிதி திரட்டித் தருவதற்கான வேண்டுகோள்
கூட்டறிக்கை
——————————————————————————————
தமிழையும் இலக்கியத்தையும் மானுடத்தையும் உயிர்களையும் நேசிக்கும் அன்பர்களே!

வணக்கம். புதுச்சேரியில் பிறந்த கவிஞர், கதாசிரியர், நாடக ஆசிரியர், கோட்பாட்டாளர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முக ஆளுமையாகத் திகழும் ரமேஷ் பிரேதன் அவர்கள் பக்கவாதம் (Paralysis Attack) என்னும் கொடுநோய் தாக்கி, உடல் இயக்கம் குன்றிய நிலையில், கடந்த ஒன்றைரை ஆண்டுகாலமாக ஒரு சிறு அறையில் முடங்கிக் கிடக்கின்றார்.

தமிழ் எழுத்துலகின் பின்நவீன இரட்டையர்களாக இணைந்து செயல்பட்ட ரமேஷ் பிரேம் இருவரும் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன் பிரிந்துவிட்டனர் என்பதை நாம் அறிவோம்.

போதிய வருமானமும் ஆதரவும் இன்றித் தனிமையில் வாடிய ரமேஷ் தொடர்ந்து எழுதுவதில் முனைப்புடன் இருக்கின்றார். ஆதரவின்மை, வருமானமின்மை, இருந்து எழுத ஓர் இடமின்மை என்னும் நெருக்கடிகளுக்கு ஆளான ரமேஷ் உயர் ரத்த அழுத்த பாதிப்பால் மூளையில் குருதிக்கசிவு ஏற்பட்டு, 22.02.2014 அன்று பக்கவாதத்தின் கொடிய தாக்குதலுக்கு உள்ளானார். அது முதல் இன்றுவரை உடலின் இடப்பகுதி செயற்பட முடியாத நிலையில் நாள் முழுவதும் படுக்கையிலேயே கிடக்கிறார். உண்பது, கழிப்பது என்னும் இயல்பான உடற்செயற்பாடுகள் கூடச் சிரமமாகிவிட்ட சூழலில் ரமேஷ் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகின்றார்.

ரமேஷ் தன் நண்பர்களைப் பிரிந்து தனிமையில் தங்கி எழுத வீடின்றித் தவித்தபோது எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் அவருடைய அன்பர்களும் செய்த பொருள் உதவியால் ஒரு சிறிய வீட்டில் தற்போது (ஒத்திக்கு) குடியிருக்கிறார். நோயுற்று உடல் உறுப்புகள் சரிவர இயங்க முடியாத சூழலிலும் தொடர்ந்து செயல்படும் ரமேஷ் சற்றே செயல்படும் வலக்கையின் ஒற்றை விரலால் மடிக்கணினியில் ஒவ்வோர் எழுத்தாக எழுதிக் கொண்டிருக்கிறார். அவ்வாறு நோயுற்ற நிலையிலேயே “அவன் பெயர் சொல்” (நாவல்), “அயோனிகன்” (குறுங்காவியம்), “அய்ந்தவித்தான்” (நாவல்) ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். எழுதுவது மட்டுமே அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல், எழுத்துக்களால் மட்டுமே அவர் புற உலகத்தோடு தொடர்பு கொள்கிறார். அவர் எழுத்துகள் தமிழ் உலகுக்கு, படைப்புலகுக்கு, ஆய்வுலகுக்கு மிகுந்த பயன் தருபவை. நோய் அகன்று அவர் முற்றிலுமாகக் குணம்பெற வேண்டும். மருத்துவச் செலவுக்கும், அன்றாடத் தேவைகளுக்கும் அவருக்குக் கணிசமான ஓர் அளவில் பணம் தேவைப்படுகின்றது.

பிரேமுடன் இணைந்து ஏறத்தாழ இருபது நூல்களையும், தனியாகப் பத்து நூல்களையும் எழுதியுள்ளார். எழுதுவதன் மூலமே அவர் உயிர்த்திருக்கிறார். சக மனிதருக்கு உதவி செய்தல் என்ற வகையிலும் ஓர் எழுத்தாளர் நோயுற்ற காலத்தில் கைவிடப்படக்கூடாது என்ற நிலையிலும் அவருக்குத் தங்களால் இயன்ற பண உதவியைச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம். இந்த வேண்டுகோள் அறிக்கையைத் தாங்கள் வாசிப்பதுடன் மட்டுமல்லாமல் தங்கள் நண்பர்களுக்கும் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்கும் நேரிலும் அலைபேசி வழியிலும் இணையவசதிகள் மூலமும் பகிர்ந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம். எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நலநிதி திரட்டித் தரும் குழுவில் தாங்களும் இருப்பதாக நினைத்து, அவருக்குக் கணிசமான ஒரு தொகை கிடைத்திட உதவி செய்ய வேண்டுகிறோம். நன்றி!

ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நலநிதி திரட்டித்தர ஆர்வமுள்ள அன்பர்கள்
M. RAMESH,
State Bank of India,
Muthialpet Branch,
Pondicherry – 605003.
A/C. No. 32821202848
Ifsc Code No. SBIN0015420
என்னும் அவருடைய வங்கிக்கணக்கில் நேரடியாகப் பணத்தைச் செலுத்தி விடலாம் அல்லது இதே வங்கிக் கணக்கில் மாற்றத் தகுந்த வகையில் வரைவோலை (DD). காசோலை(Cheque)யாக M.Ramesh என்ற பெயரில் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

ரமேஷ் பிரேதன்
எண்.27. அங்காளம்மன் கோவில் வீதி,
அங்காளம்மன் நகர்,
முத்தியால்பேட்டை,
புதுச்சேரி – 605003.
அவருடன் தொடர்புகொள்ள:
8903682251, 8908610563.
இ.மெயில் முகவரி : rameshpredan@gmail.com

ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நலநிதி திரட்டித் தருவதற்கான
அமைப்புக்குழு:
——————————————————————————————
எழுத்தாளர் பிரபஞ்சன், புதுச்சேரி. 9894583715
writerprapanchan@gmail.com

ஆய்வறிஞர் வே.மு. பொதியவெற்பன், பெங்களூரூ. 9894774213
pothi48@gmail.com

பேராசிரியர் முனைவர் பா. இரவிக்குமார், புதுச்சேரி. 94443227507
paa.ravikumar@gmail.com

இதழாளர் மனோன்மணி, ஆசிரியர், புதுஎழுத்து. 9042158667
pudhuezuthu@gmail.com

கவிஞர் கரிகாலன், விருத்தாசலம். 8973309851
kalamputhithu@gmail.com

ஆய்வாளர் இரா. கந்தசாமி, புதுச்சேரி. 7598202632
karasurkandasamy@gmail.com

எழுத்தாளர் ரமேஷ் பிரேதன் அவர்களுக்கு நலநிதி திரட்டித்தரும் இத்திட்டத்தை மேற்குறிப்பிட்ட நாங்கள் சேர்ந்து விவாதித்துக் கூட்டறிக்கையாகவும், வேண்டுகோளாகவும் தங்கள் முன் வைக்கின்றோம்.

ரமேஷ் பிரேதன் படைப்புகள்
——————————————
புதுச்சேரியில் 27.10.1964 அன்று பிறந்த ரமேஷ் பிரேதன் அவர்களுக்குத் தற்போது ஐம்பது வயது. தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் வல்லமை பெற்றவர். நிறப்பிரிகை, அமீபா, கதைசொல்லி, பரிமாற்றம் ஆகிய இதழ்களில் பணியாற்றியவர்.

1998 ஆம் ஆண்டு, கவிதைக்கெனப் புதுவை அரசின் கம்பன் விருது
1999 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியா சின்னத்தம்பி வாத்தியார் நினைவு அறக்கட்டளை விருது
2001 ஆம் ஆண்டு, நாவலுக்கெனப் புதுவை அரசின் கம்பன் விருது
2010 ஆம் ஆண்டு, சுஜாதா கவிதை விருது
2011 ஆம் ஆண்டு களம்புதிது கவிதை விருது
ஆகிய விருதுகளை ரமேஷ் பிரேதன் பெற்றுள்ளார்.

இவற்றுள், சுஜாதா விருதும் களம்புதிது விருதும் ரமேஷ் பிரேதன் தனியாகப் பெற்ற விருதுகள் ஆகும்.

ரமேஷ் பிரேதன், பிரேம் அவர்களுடன் இணைந்து எழுதிய நூல்கள்:
—————————————————————————————
1. புதைக்கபட்ட பிரதிகளும், எழுதப்பட்ட மனிதர்களும் (நாவல்)
கிரணம் வெளியீடு, புதுச்சேரி – 605008.

2. ஆதியிலே மாம்சம் இருந்தது (நாடகங்கள்)
கிரணம் வெளியீடு, புதுச்சேரி – 605 008, முதற்பதிப்பு, டிசம்பர் 1995.

3. இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும் (கவிதைகள்) கசடற வெளியீடு, புதுச்சேரி – 605008, முதற்பதிப்பு, 1995

4. இளையராஜா இசையின் தத்துவமும் அழகியலும்
செம்புலம் வெளியீடு, சென்னை – 600 097, முதற்பதிப்பு – 1998, மறுபதிப்பு – 1999

5. முன்னொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன
(சிறுகதைகள்) அகரம், தஞ்சாவூர் – 613 007, முதற்பதிப்பு – அக்டோபர் – 1999.

6. கி. ராஜநாராயணன் எழுத்துலகம் (ஆய்வு)
கலைஞன் பதிப்பகம், சென்னை – 600 017, முதற்பதிப்பு 2000.

7. சிதைவுகளின் ஒழுங்கமைவு : பின்நவீனத்துவப் பிரச்சினைப்பாடுகள் (கட்டுரைகள்)
காவ்யா, பெங்களூரூ – 560 038, முதற்பதிப்பு செப்டம்பர் 2000

8. கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள்
(குறு நாவல்கள்) புதுப்புனல், சென்னை. 600 023. முதல்பதிப்பு, டிசம்பர் – 2000,மறுபதிப்பு டிசம்பர் 2002

9. சொல் என்றொரு சொல் (நாவல்)
காவ்யா, பெங்களூரூ, முதற்பதிப்பு, டிசம்பர் 2001.

10. கறுப்பு வெள்ளைக் கவிதை (கவிதைகள்)
அகரம், தஞ்சாவூர் – 613007, முதற்பதிப்பு, ஜுன் 2002

11. பேரழகிகளின் தேசம் (கவிதைகள்)
மருதா, சென்னை – 600 014, முதற்பதிப்பு, டிசம்பர் 2004.
மறுபதிப்பு, டிசம்பர் 2008.

12. பரதேசி (சிறுகதைகள்)
மருதா, சென்னை – 600 014, முதற்பதிப்பு, டிசம்பர் 2003.

13. சக்கரவாளக் கோட்டம் (கவிதைகள்)
காலச்சுவடு, நாகர்கோவில் – 629001
முதற்பதிப்பு – டிசம்பர் 2004., மறுபதிப்பு – 2010.

14. இரண்டு பிரெஞ்சு நாடகங்கள் (மொழிபெயர;ப்பு)
சந்தியா பதிப்பகம், சென்னை 600 083. முதற்பதிப்பு – மே. 2005

15. மகாமுனி (குறுநாவல்கள்)
அடையாளம், புத்தாநத்தம் – 621 310. முதல்பதிப்பு – 2005.

16. கொலை மற்றும் தற்கொலை பற்றி (கவிதைகள்)
மருதா, சென்னை – 600 0, முதற்பதிப்பு, செப்டம்பர் 2005.

17. அதீதனின் இதிகாசம் (காவியம்),
மருதா, சென்னை – 600 014, முதற்பதிப்பு, நவம்பர் 2005.

18. உப்பு (கவிதைகள்)
மருதா, சென்னை – 600 014, முதற்பதிப்பு, 2006.

19. நாவற்கொம்பு (கவிதைகள்)
மருதா, சென்னை – 600 014, முதற்பதிப்பு, 2006.

20. பேச்சு – மறுபேச்சு : பின்நவீனத்துவம் நோக்கி (கட்டுரைகள்)
மருதா, சென்னை – 600 014, முதற்பதிப்பு, மே 2006.

21. கட்டுரையும் கட்டுக்கதையும் (கட்டுரைகள்)
மருதா, சென்னை – 600 014, முதற்பதிப்பு, ஜுன் 2006.

22. குருவிக்காரச் சீமாட்டி (சிறுகதைகள்)
மருதா, சென்னை – 600 014, முதற்பதிப்பு, ஜுன் 2006.

ரமேஷ் பிரேதன் தனியாக எழுதிய நூல்கள்:
—————————————————————————————
1. சாராயக்கடை (கவிதைகள்)
உயிர்மை, சென்னை – 600 018, முதற்பதிப்பு, – 2008.

2. காந்தியைக் கொன்றது தவறுதான் (கவிதைகள்)
காலச்சுவடு, நாகர்கோவில் – 629 001, முதற்பதிப்பு, டிசம்பர் – 2008.

3. பன்றிக்குட்டி (கவிதைகள்)
புதுப்புனல், சென்னை – 600 005, முதற்பதிப்பு. 2011.

4. மனநோயர் காப்பகத்தில் பின்காலனிய நாட்டின் கவிஞன் (கவிதைகள்) புது எழுத்து, காவேரிப்பட்டினம் – 635 112, முதற்பதிப்பு, ஜூலை 2013.

5. அவன் பெயர் சொல் (நாவல்)
அகரம், தஞ்சாவூர்- 613 007, முதற்பதிப்பு, ஜனவரி – 2014.

6. அயோனிகன் (குறுங்காவியம்)
உயிர்மை, சென்னை – 600 018, முதற்பதிப்பு, – 2014.

தற்போது வெளிவர உள்ள நூல் –

அய்ந்தவித்தான் (நாவல்)
உயிர்மை, சென்னை – 600 018.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.