ஜல்லிக்கட்டு விளையாட்டிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளதை எதிர்த்து, ஜல்லிக்கட்டு அமைப்பினர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கமுடியாது என்று உத்தரவிட்டனர். மேலும் தடையை நீக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட 5 பேர் மனுக்களையும் தள்ளுபடி செய்துள்ளது.
இதனிடையே காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஜல்லிக்கட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதால், மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர முடியாது என்று தெரிவித்தார்.
ஆனால் சட்ட விதிகளின்படி, தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வரலாம் என்றும் அப்படி தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தால் மத்திய அரசு துணை நிற்கும் என்றும் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.
இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதுவாக, ஜெயலலிதா அவசர சட்டம் கொண்டு வருவாரா ? என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ளது.