இளங்கோ கல்லாணை
முதல் எதிரி பாஜக. இரட்டை வேடம் போட்டு ஏமாற்றியது. விலங்கு நல வாரியத்தை ஏவி விட்டு வழக்குப் போட்டு மக்களை முட்டாளாக்கியது. சட்டமியற்றாமல் அராசானை என்று இழுத்தடித்தது. இன்று வரை மோதியின் அரசியலைத் தெரிந்தவர்களுக்குத் தெரியும் காசென்றால் வாயைப் பிளக்கும் குஜராத்தி.
இரண்டாவது எதிரி காங்கிரஸ். ஜெயராம் ரமேஸ் போன்ற முட்டாளை உருவாக்கி மண்ணு ஒரு கையெழுத்து போட்டிருக்கார். மூன்றாவது திராவிடக் கட்சிகள். தடையை மீறுவோம் என்று மோதிக்கு சவால் விட முடியாமல் மூக்கனாங் கயிறு மாட்டப்பட்டு நிற்கும் காயடிக்கப்பட்ட காளைகள். வழக்கில் சிக்கி அஞ்சி நிற்கிறார்கள். நான்காவது PETA. இந்த அமைப்பு ஒரு வாய்தாவிற்கு கோடிக் கணக்கில் செலவழிக்கிறது. எவனும் யாரு என்னன்னு கேட்க மாட்டேன் என்கிறான்.
ஐந்தாவது முற்போக்கு முட்டாள்கள். அவனுக்கு சாதி வேண்டும் என்பதால் சாதியை இதில் இழுத்து விடுகிறான். பேடிகள். வீரமணி போன்ற ஒரு முட்டாளை திராவிடத் தலைமைக் கழகம் பெற்றிருப்பது தான் அந்த இயக்கத்தின் அந்திம காலக் குறியீடு. அடே முட்டாள் மணி. நீ சங்கரனைப் போலவே இருக்கிறாய்.
நானும் எவ்வளவோ விசயங்களில் பார்த்திருக்கிறேன். தமிழ் ஒற்றுமை என்பதைத் துவக்கினாலே ஊடு தட்டு ஆட்டம் போடும் பிச்சைக்காரர்கள். ஆமா ஈழத்தில் இன அழிப்பு நடந்த போது வாங்க என்றோம். இல்லங்க யாழ்ப்பாணத்தில பிள்ளைமார் சமூகம் தலித்தை ஒடுக்குதுங்க. சாகட்டும் விடுங்க என்றார்கள். கூடங்குளம். அது அந்த மீன் பரவனுங்க கொழுப்பெடுத்தவனுங்க என்றார்கள். பனை காப்போம் என்றால் அது நாடார் பிரச்சனை. அந்நிய முதலீடு எதிர்ப்பு என்றால் நாடார் செட்டியார்கள் பிரச்சனை. காவேரி என்றால் நிலபிரபுத்துவ பிரச்சனை. உங்களைத் தெரியும். நீங்கள் கயவாளிகள் கோழைகள். இப்போது சல்லிக்கட்டில் ஆதிக்க சாதி என்று ஆரம்பிக்கிறார்கள். நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் எழுச்சியை நிலத்தில் நின்று உணர்ந்து சொல்கிறேன். திருப்பி அடிக்க மக்கள் முடிவு செய்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள்.
மாட்டுக் கறி தின்னு. என் மாட்டைத் தொட்ட பிச்சுப்புடுவேன் பிச்சி”
இளங்கோ கல்லாணை, முற்போக்காளராக அறியப்படுபவர். சாதியத்தை தூக்கி நிறுத்தும், தலித்துகளை இழிவு செய்யும் விதமாகவும் இவர் எழுதியிருப்பதற்கு முகநூலில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கவிதா சொர்ணவல்லி
/தமிழ் ஒற்றுமை என்பதைத் துவக்கினாலே ஊடு தட்டு ஆட்டம் போடும் பிச்சைக்காரர்கள். ஆமா ஈழத்தில் இன அழிப்பு நடந்த போது வாங்க என்றோம். இல்லங்க யாழ்ப்பாணத்தில பிள்ளைமார் சமூகம் தலித்தை ஒடுக்குதுங்க. சாகட்டும் விடுங்க என்றார்கள். கூடங்குளம். அது அந்த மீன் பரவனுங்க கொழுப்பெடுத்தவனுங்க என்றார்கள். பனை காப்போம் என்றால் அது நாடார் பிரச்சனை. அந்நிய முதலீடு எதிர்ப்பு என்றால் நாடார் செட்டியார்கள் பிரச்சனை. காவேரி என்றால் நிலபிரபுத்துவ பிரச்சனை. உங்களைத் தெரியும். நீங்கள் கயவாளிகள் கோழைகள். இப்போது சல்லிக்கட்டில் ஆதிக்க சாதி என்று ஆரம்பிக்கிறார்கள். நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் எழுச்சியை நிலத்தில் நின்று உணர்ந்து சொல்கிறேன். திருப்பி அடிக்க மக்கள் முடிவு செய்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள்.
மாட்டுக் கறி தின்னு. என் மாட்டைத் தொட்ட பிச்சுப்புடுவேன் பிச்சி /
மிஸ்டர். கல்லணை…
*பிச்சைக்காரகள் யார் ?? எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களை பிச்சைக்காரர்கள் என்று சொல்கிறீர்கள்??? அத்தனை தைரியம் இருந்தால் ஜாதியை குறிப்பிட்டே எழுத வேண்டியதுதானே ??? “பிச்சு புடுவேன்” தைரியம் எல்லாம் எழுத்தில் மட்டும்தானா ???
*/ஈழத்தில் இன அழிப்பு நடந்த போது வாங்க என்றோம். இல்லங்க யாழ்ப்பாணத்தில பிள்ளைமார் சமூகம் தலித்தை ஒடுக்குதுங்க. சாகட்டும் விடுங்க என்றார்கள்/ தீக்குளித்து வீணாய் செத்து போன செங்கொடி எந்த சாதி கல்லணை ??? இதே இலங்கை பிரச்சனைக்காக, ஜல்லிக்கட்டு மாடு வளர்க்கும் வீட்டு பெண்கள் எத்தனை பேர் தீக்குளித்தார்கள் ???? .
*மக்கள் எழுச்சி என்று சொல்கிறீர்களே ??? எந்த மக்கள் ?? தேவர் மக்களா ? கள்ளர் மக்களா ??? இல்லை மதுரையை அடக்கி ஆண்டு கொண்டிருப்பதாகப் பீற்றி கொண்டிருக்கும் ரவுடிகளையா ???
*மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டில், அந்த வளையத்திற்குள் எந்த ஜாதி மக்கள் இறங்குகிறார்கள், எந்த ஜாதி மக்கள் பந்தயத்திற்கு வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா ???
*/மக்கள் எழுச்சியை நிலத்தில் நின்று உணர்ந்து சொல்கிறேன்/ எந்த நிலத்தில் நின்று இந்த அறைகூவலை விடுக்கிறீர்கள் ??? திருநெல்வேலி நிலத்திலா அல்லது தருமபுரி நிலத்திலா ??? அதையும் சற்று விளக்கி இருக்கலாமே ???
*/திருப்பி அடிக்க மக்கள் முடிவு செய்தால் நீங்கள் இருக்க மாட்டீர்கள் / பந்தய கோட்டிற்கு வெளியே நிற்கும் மக்கள் கை உயர்த்தினால், திருப்பி அடிக்கும் மக்களின் வம்சங்களே இருக்க மாட்டார்கள்.
*/மாட்டுக் கறி தின்னு. என் மாட்டைத் தொட்ட பிச்சுப்புடுவேன் பிச்சி/ என்ற இந்த வரியில் நீங்கள் சுட்டுவது யாரை?? இங்கு மாட்டுக்கறி தின்பவன் யார்? அப்படி யார் தின்பதாக ஒரு பொது புத்தி இங்கு உலவுகிறது? நீங்கள் யாரை நோக்கி சொல்கிறீர்கள்?
நான் மிக வெளிப்படையாகவே கேட்கிறேன். நாங்கள் அந்த மாட்டைத் தொடுகிறோம். அதன் மீது நீங்கள் கட்டிவைத்திருக்கும் சாதிவெறியையும் பிய்த்தெறிகிறோம். நீங்கள் சொல்வதற்குத் தயாரா கல்லணை??
இந்த எதிர்வினைக்கு வந்த எதிர்வினைகள், இளங்கோ கல்லாணையும் அதில் எதிர்வினையாற்றியிருக்கிறார்.
ஹரி ஹரன் நமது தோழர்கள் பலர் லைக் செய்துள்ளனர்..
Elango Kallanai உங்கள் விளக்கம் எதாவது இருக்கிறதா.. மாட்டுக்கறி திண்பவர்கள் குறித்த வாதம் ஏன்..
Elango Kallanai அது வீரமணி விலங்குகளுக்கு கொடுமை என்றுசொன்னதற்கு பதில். சரியா? அப்புறம் பாருங்க இன்று வரலாற்று ரீதியா எல்லாத்துக்கும் பதில்சொல்லு அப்போது தான் பேசுவேன் என்று என்னிடம் கேட்ட தலித்திய செயல்பாட்டார்களுடன் என்னுடைய தமிழ் தேசிய நிலைப்பாடு வெளிப்படையானது. என்ன பெரிய சதி? அதெல்லாம் நேரடியாகவே விவாதம் செய்கிற ஆள் நான்.
கவிதா சொர்ணவல்லி Elango Kallanai அப்போ நீங்க வசைபாடிருக்க ஆட்கள் எந்த ஜாதியை சேர்ந்தவங்க. சொல்லுங்க
கவிதா சொர்ணவல்லி யார அடிப்பீங்க நீங்க ?? யாரு மாட்டுக்கறி திங்குரா ??? எந்த நாய் இலங்கைக்காக போராடல ?? எந்த நாய் தீக்குளிச்சு செத்தது ??? Elango Kallanai சொல்லுங்க
ஹரி ஹரன் வீரமணியுடன் சண்டை இடுவது என்றால் அவருடன் சண்டை போடுங்கள்..
பெரியார் கொண்டுவந்த மாட்டுக்கறியை பொது இடத்தில் திண்பது என்பது இங்கே இருக்கும் ஆதிக்க சாதி மனப்பான்மைக்கும், பார்ப்பனியத்துக்கும் கொடுத்த செருப்படி.
உங்க சண்டையை நேரிடையாக வீரமணியிடம் சென்று போடவும்.. மாட்டுக்கறி சாப்பிடுவதை இழிவு என்று கூறிய பார்ப்பனியமும் நீங்களும் ஒன்று தான் என்று தோன்றுகிறது…
ஹரி ஹரன் அதை எதிர் கொள்ள வேண்டிய இடம் வேறு.. ஒடுக்கபப்ட்டவர்கள் மீது திணிக்கப்பட்ட அநீதியை எதிர்த்து செய்யப்பட்ட ஒரு போராட்ட வழிமுறையை நீங்கள் எப்படி விமர்சனம் செய்யலாம்..
அடிப்பேன்னு சொன்னதுல ஆரம்பிச்சு தலித்துகள் ஈழத்துக்காக போராடல, அப்படின்னு பொய் சொல்லிருக்கத பத்தி பேச மாட்டீங்களா ??எந்த தலித் அல்லாத ஜாதி வீட்டு பொண்ணு, ஈழத்த்க்காக தீ குளிச்சு செத்து போனா ???? அந்த கணக்கு கேக்க மாடீன்களா ???
அடிச்சுருவேன் கொன்னுருவேன் /// இதெல்லாம் என்ன சாதி திமிரா. மறுபடி ஒங்குரதுக்கு மத்தவனுக்கு கை இல்லையா ???