தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், புதன்கிழமை காலை வரை சுமார் 40-க்கும் அதிகமான திமிங்கலங்கள் உயிரிழந்து விட்டன.
மேற்கூறிய கடற்கரை பகுதிகள் அருகில் தான் கூடன்குளம் அணுமின் நிலையம், தாது மணல் குவாரிகள், தாரங்கதாரா கெமிக்கல்ஸ் ஆலைகள் உள்ளன. மேலும், அண்மையில் பெய்த மழையின் போது தூத்துக்குடி பக்கிள்ஓடை வழியாக ஸ்டெர்லைட், விவி டைட்டானியம் ஆலைக் கழிவுகள் கடலில் கலந்து விட்டதாக புகார் எழுந்தது.
#Video: கொத்துகொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்: என்னதான் நடக்கிறது கூடங்குளம் கடல்பகுதிகளில்?
இதனிடையே,கூடங்குளம் அணுமின கதிர் வீச்சு காரணமாக இந்த திமிங்கலங்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுதுள்ளது.
கூடங்குளம் அணு உலையின் அருகாமை பகுதிகளில் திமிங்கலங்கள் கரை ஒதுங்கலை அவ்வளவு சாதாரண விசயமாக பார்க்க முடியாது. ஏனெனில் புகுசிமாவில் கதிர்வீச்சால் டால்பின்கள் கொல்லப்பட்டுள்ளன.
புகுஷிமா அணு உலை அருகே செத்து மிதந்த 17 டால்பின்களுக்கு பிரேத பரிசோதன நடத்தியதில், அதன் நுரையீரல் முழுக்கவும் வெள்ளை நிறமாக மாறி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். முடிவாக, கதிர் வீச்சினால் உருவாகும் ischemia (குறிப்பிட்ட பகுதிக்கு ரத்தம் செல்லாமல் இருப்பது) என்ற நிலையினால் டால்பின்கள் இறந்திருப்பதை கண்டு பிடித்திருக்கார்கள்.
புகுஷிமாவில் டால்பின்களுக்கு நிகழ்ந்த விஷயங்களே, திருச்செந்தூரில் கரை ஒதுங்கிய திமிங்கலங்களுக்கு ஏற்பட்டிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். அதனால், இறந்த டால்பின்களுக்கு கண்டிப்பாக பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.