இடிந்தகரை முதல் மணப்பாடு வரையிலான கடற்கரை எங்கும் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியிருக்கின்றன, அல்லது இறந்து கிடக்கின்றன. கூடங்குளம் அணுஉலைப் பகுதியில் ஏராளமான காவல் துறையினர், துணை இராணுவத்தினர் குவிக்கப்படுகின்றனர். நேற்று (சனவரி 11) இரவு முழுவதும் கூடங்குளம் பகுதியில் சிறியரக விமானங்கள் பறந்த வண்ணமிருந்தன. அணுஉலையில் சில பரிசோதனைகள் நடப்பதாக நேற்று செய்திகள் வந்தன. அங்கே என்னவோ குழப்பம் நடக்கிறது. ஆனால் அதிகாரவர்க்கம் வழக்கம்போல அமைதிகாக்கிறது, அல்லது மூடிமறைக்க முனைகிறது.
பேய்க்கு வாழ்க்கைப்பட்டோரே, பிணம் தின்ன பழகிக் கொள்ளுங்கள். இதுதான் நமக்கு வாழ்க்கை இனிமேல்!
கூடங்குளம் அணுஉலைத் தலைவர் சுந்தர் அய்யா அவர்களே, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமே, தமிழ் நாட்டின் மாநில அரசே, இந்திய ஒன்றிய அரசே எப்போது பேசுவீர்கள்? நாங்களும் செத்த பிறகா?
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை.
பிரபாகர் கப்பிக்குளம்
குறிப்பு: நியூசிலாந்து, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா அங்கேயும் சூழலைக் கெடுக்கும் ஆலைகள் உள்ளன.திருச்செந்தூர் கடற்பகுதிகளில் ஒதுங்கும் டால்ஃபின் வீடியோ பதிவாகியுள்ளது.
வீடியோ: பிரபாகர் கப்பிக்குளம்
முகப்புப்படம்: செந்தூர் குமார்
5 thoughts on “#Video: கொத்துகொத்தாக கரை ஒதுங்கிய திமிங்கிலங்கள்: என்னதான் நடக்கிறது கூடங்குளம் கடல்பகுதிகளில்?”