திங்கள்கிழமை ஜல்லிக்கட்டு தொடர்பான விவாதம் பு.த டிவியில் நடக்கிறது, இறுதியில் நெறியாளர் சொல்கிறார்
“ஒரு தலித் முதியவர் சடலத்தை இன்னமும் பொதுப்பாதையில் எடுத்து செல்ல முடியாத நிலை நிலவுகிறது. ஆனால் நாம் அதை விவாதிக்காமல் ஜல்லிக்கட்டை விவாதிக்கும் சூழலில் இருக்கிறோம்” என வருந்துகிறார்.
உடனே ஃபேஸ்புக்கில் நெகிழ்ச்சிப்பதிவுகள் துவங்குகின்றன. இவ்விடயத்தில் ஒரு நெறியாளரின் கவலையை கண்டு நாம் பரவசப்பட்டால் மட்டும் போதுமா? தலித் முதியவரின் சடலம் பொதுப்பாதையில் போக முடியாத அவலத்தை டிவியில் விவாதிக்கவிடாமல் தடுப்பது எது எனும் கேள்வி ஏன் நம்மில் எழுவதே இல்லை.
ஒரு அனுசரணையான வாக்கியம் நம்மை பரவசப்படுத்தும் பலவீனம்தான் நம் எழுப்பவேண்டிய கேள்விகளை எழவிடாமல் செய்கிறது.
வில்லவன் இராமதாஸ், சமூக-அரசியல் விமர்சகர்.
முதியவரின் உடலை பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல விடாமல், பாடையை கீழே இறக்கு, வலுக்கட்டாயமாக பிணத்தை எடுத்துக்கொண்டு ஓடுகிறது போலீஸ். இந்த வீடியோவைப் பாருங்கள்…தன்னால் உங்களிடமிருந்து ‘போலீஸ் அராஜகம் ஒழிக’ என்கிற கோஷம் வந்துவிழும்..