பிரம்மச்சாரி ஐயப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம்: வரிந்து கட்டுகிறார்கள் அர்ச்சகர்களும் அரசியல்வாதிகளும்.

22ptkrk07-centr_23_2630853e.jpg

சபரிமலை கோவிலுக்குள் வயது கட்டுப்பாடு இன்றி பெண்களை அனுமதிக்க வேண்டும்” என்று தாக்கல் செய்யப்பட பொதுநல மனு மீது, பத்தாண்டுகள் கழித்து நேற்று விசாரணை நடைபெற்றது. அப்போது நீதிபதிகள்  தீபக்மிஸ்ரா, பினாகி சந்திரகோஷ் மற்றும் என்.வி.ரமணா ஆகியோர்  “கோவிலுக்கு பெண்கள் போவது என்பது அவர்களுடைய தனிப்பட்ட உரிமையாகும் எனும்போது, எந்த அடிப்படையில் அவர்களை தடுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினர்.

Siva_1485609e

நீதிபதிகளின் கருத்து தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கேரள அறநிலையத்துறை அமைச்சர்  சிவக்குமார்  “சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கென ஆச்சாரங்கள் உள்ளன. அரசு ஒரு போதும் அந்த ஆச்சாரங்களை மீறாது. பெண்களை அனுமதிக்க வேண்டுமென நீதிமன்றம் கூறினால் அதை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

tantri-kandaru-rajeevaru

நீதிபதிகளின் விமர்சனம் குறித்து சபரிமலை முன்னாள் தந்திரி கண்டரரு ராஜீவரரு கூறியபோது “சபரிமலை அய்யப்பன் பிரம்மச்சாரி ஆவார். அவரை தரிசிக்க செல்வோர் பிரம்மச்சரியம் கடைப்பிடிக்க வேண்டும். இது பெண்களின் உடல் அமைப்புக்கு உகந்தது அல்ல. அவர்களுக்கு மாத விடாய் ஏற்பட்டால் அசவுகரியங்கள் ஏற்படும். சன்னிதானம் அசுத்தமாகும். எனவேதான் பெண்களை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. இது கால காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நியதி. இதை மீறினால் நாடு பெரும் துன்பங்களை சந்திக்கும் நிலை உருவாகும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.

19sept_TIPAJHI-_20_2117109e

இவ்விவகாரம் தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் “பிற மதங்களிலும் பல கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அதைப்பற்றி விமர்சிக்கவோ, தலையிடவோ அதிகாரம் இல்லை. அதே போல் இந்துக்கள் வழிபாட்டு முறைகளையும் மீறக்கூடாது என்று சொல்வதில் என்ன தவறு?  சில இடங்களில் பெண்கள் மட்டுமே வழிபடும் உரிமை உள்ளது. அங்கு ஆண்கள் செல்லமுடியாது. அய்யப்பன் கோவில் சுற்றுலாதளம் கிடையாது. அங்கு செல்ல சுயக்கட்டுப்பாடு தேவை. விதண்டாவாதிகளால் தான் பிரச்சினை ஏற்படுகிறது” என்றும் குற்றம்சாட்டினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.