தோழர் பரதனின் சொத்து குவிப்பு பட்டியல் இதோ…

80 வருடங்களுக்கு மேலாக கம்யூனிஸ்டாகவே வாழ்ந்து மறைந்த,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுசெயலாளர் தோழர் பரதனின் மறைவுக்கு பின்னர், அவருடைய சொத்துக்கள் என்று கருதப்பட்டவைகளின் பட்டியலும் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது

*துருபிடித்த அலமாரி

*ஒரு ஜோடி ஷூ

*சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று

*அவருடைய அடையாளமான கோட் ஒன்று

*பழுதடைந்த இரவு விளக்கு ஒன்று

*ஒரு பிளாஸ்க்

Com.-Bardhan_2

இந்த பொருட்களுடன்தான் அவர் கடந்த ஐந்தாண்டுகளாக வாழ்க்கை கடத்தி இருக்கிறாரா ? என்று நெகிழ்ச்சி குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

43Bardhan.jpg.image.975.568.jpg

ஆதிவாசிகளுக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், உழைக்கும் வர்கத்தினருக்காகவும் எழுதியும் குரல் கொடுத்தும் தன்னுடைய வாழ்க்கையை கழித்த தோழருக்கு செவ்வணக்கம் என்று,  கட்சி பேதம் பாராமல் அனைவரும் .  காம்ரேட் பரதனுக்கு மரியாதை செலுத்தியுள்ளனர்.

 

முகப்பு புகைப்படம்: தோழர் பரதன் மனைவி பத்மாவுடன்.

13 thoughts on “தோழர் பரதனின் சொத்து குவிப்பு பட்டியல் இதோ…

 1. கண்கள் கலங்கும் பதிவு இது ! கம்யூனிஸ்ட்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் மக்கள் சேவைக்காகவே அர்ப்பணித்து முடித்து இந்த மனித குலத்திற்கு விதையாய் மாறுவார்கள் என்ற உண்மையை …தோழர் பரதனும் தன வாழ்க்கையால் நிரூபித்து விட்டுச் சென்றிருக்கிறார் !

  Like

 2. கம்யுனிஸ்ட்கள் என்றும் மக்களுக்காகத்தான் இருக்கிறார்கள் என்பதை தோழர்.ஏ.பி,பரதன் அவர்களின் வாழ்கை இருந்துள்ளது.
  அரசியலில் நேர்மை. எளிமை. அர்ப்பணிப்பு, தியாகம் என எல்லாவற்றுக்கும் சொந்தக்காரர்கள் கம்யுனிஸ்ட்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள துவங்கிவிட்டார்கள்,
  செவ்வணக்கம் தோழருக்கு

  Like

 3. உண்மையான காந்தியவாதி,புத்தர் என வாழ்ந்து காட்டியவர் என்றெல்லாம் புகழலாம் …ம்ம்ம் ..மன்னிக்கவும்..தானும் வாழாது அடுத்தவனையும் வாழ விடமாட்டான் கம்யுனிஸ்ட் என தோழர் ஒருவர் கூறியது தான் நினைவிற்கு வருகின்றது.

  Like

 4. நல்லகண்ணுவை பிடிக்கும் ,சங்கரைய்யாவை பிடிக்கும் ஆனால் அவர்கள் இருக்கும் கட்சியை பிடிக்காது என்று சொல்லிக்கொண்டிருக்கும் தமிழ் சொந்தங்களே, உண்மை,நேர்மை. எளிமை. அர்ப்பணிப்பு, தியாகம் என யாராவது அரசியலில் இருக்கிறார்களா என்றால்,எல்லாவற்றுக்கும் சொந்தக்காரர்கள் கம்யுனிஸ்ட்கள் மட்டுமே என்பதை புரிந்துகொள்ளுங்கள் . கம்யூனிஸ்ட்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் மக்கள் சேவைக்காகவே அர்ப்பணித்து முடித்து இந்த மனித குலத்திற்கு விதையாய் மாறுவார்கள் என்ற உண்மையை …தோழர் பரதனும் தன வாழ்க்கையால் நிரூபித்து விட்டுச் சென்றிருக்கிறார் !

  Like

  1. ஆனால் இன்றைய கம்யூனிஸ்ட் தலைவர்கள் இதை உணர்ந்து செயல்படவேண்டுமே! எல்லா கம்யூனிஸ்ட்களும் பரதன் போல் வாழ்ந்திடமுடியாது..எம்.பி…எம்.எல்.ஏ வாக இருந்த கம்யூனிஸ்ட்கள் பலர் கோடிக்கணக்கான சொத்துக்களுடன் வாழ்கிறார்கள் என்பது வருத்தப்பட வேண்டியது. எனவே தியாகதோழர் பரதனோடு எல்லாகம்யூனிஸ்ட் தோழர்களையும் ஒப்பிடாதீர்கள்

   Like

   1. அப்படி எந்த ஒரு கம்யூனிஸ்ட் இருக்கிறார் என்று கூறுங்கள் தோழர்

    Like

 5. எளிமை வாழ்வைப் போற்றுகிறேன், ஆனால் ஒரு அரசியல் தலைவர், மக்கள் பிரதிநிதியின் பணி எளிமையாக வாழ்தல் மட்டும் அல்ல. தொகுதிக்கு நாட்டிற்கு என்ன நல்ல திட்டங்கள் கொண்டு வர பாடு பட்டார் என்பதே .
  பரதனோ நல்லகன்னுவோ டி ராஜாவோ பாலபாரதியோ, லீமா ரோசோ தொகுதிக்கு எத்துனை புதிய தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் கொண்டு வந்தனர்
  என்பதும் பகிர்ந்தால்

  Like

  1. தோழர் நல்லகண்ணு அவர்கள் எந்த எம்.பி..எம்.எல். ஏ.பதவியிலும் இருந்தது இல்லை. மற்றவர்களோடு அவரை ஒப்பிடவேண்டாம்…

   Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.