திங்கள்கிழமை மாலை முதல் சுமார் 300 க்கும் மேல் ஓங்கில் வகையை சேர்ந்த டால்பின்கள், திமிங்கலங்கள், தூத்துக்குடி- நெல்லை கடற்கரை ஓரங்களில் கரை ஒதுங்கி உள்ளன.
நேற்று முன் தினம் கூடங்குளம் 2-வது அணு உலையில் எதோ சோதனைகள் நடந்ததாகவும் கதிர்வீச்சின் அளவு மிக அதிகமாக இருந்ததாகவும் சிலர் சொல்கின்றனர் . தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் மீன்கள் ஒதுங்கிய விவகாரத்தில் உண்மைநிலையை மக்களுக்கு விளக்கம் அளிப்பார்களா ?
குணசீலன் வேலன், களச் செயல்பாட்டாளர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இருபதுக்கும் மேற்பட்டவை உயிரிழந்து விட்டன.
இதன் அருகில் தான் கூடன்குளம் அணுமின் நிலையம், தாது மணல் குவாரிகள், தாரங்கதாரா கெமிக்கல்ஸ் ஆலைகள் உள்ளன. மேலும், அண்மையில் பெய்த மழையின் போது தூத்துக்குடி பக்கிள்ஓடை வழியாக ஸ்டெர்லைட், விவி டைட்டானியம் ஆலைக் கழிவுகள் கடலில் கலந்து விட்டதாக புகார் எழுந்தது.
ஆனால், பருவநிலை மாற்றம், பூமி வெப்பமயமாதல் என்று காரணம் சொல்வார்கள் கார்ப்பரேட் விஞ்ஞானிகள்.
குறிப்பு: கரை ஒதுங்கிய திமிங்கலங்களைக் காப்பாற்ற எந்த மீட்புபடையும் வரவில்லை. மீனவர்கள் தான் கடலுக்குள் கொண்டு சென்று விடுகின்றனர்.
பிரபாகரன் கப்பிகுளம், கள செயல்பாட்டாளர்.
புகைப்படம்: மழை வெள்ளத்தின் போது கடலில் கலந்த ஸ்டெர்லைட் கழிவு.