மதுரையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவின் மதுரையில்அலுவலகத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னையிலுள்ள அவரது வீட்டில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உட்கட்சிப் பூசல் காரணமாக அமைச்சர் அலுவலகத்தில், நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிமுகவின் அலுவலகத்தில் குண்டுவீசும் அளவுக்கு உட்கட்சி பூசல் வளர்ந்திருக்க, திமுகவின் உட்கட்சி பூசல் ஓரளவுக்கு பராவயில்லை ரகம்தான்!
திமுக ஆட்சியின் போது அமைச்சராக பதவி வகித்தவர் கே.என்.நேரு. தற்போது மாநிலங்களவை திமுக எம்.பி.யாக பதவி வகித்து வருபவர் திருச்சி சிவா. சிவாவை நேரு தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. நேரு தீவிர முக.ஸ்டாலின் ஆதரவாளர் என்பது அவருக்கு சாதகமாக உள்ளது. இந்நிலையில், சிவாவுக்கு ஆதரவாக உள்ள இளைஞரணியினர் நேருவின் அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.