ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பல் ஏன் இந்திய கடல் பகுதிக்குள் வந்தது?

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்கக் கப்பலான சீமென்கார்டு ஓகியோ கடந்த 2013ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி தூத்துக்குடி அருகே சிறைபிடிக்கப்பட்டது. கப்பலில் இருந்த 35 ஊழியர்களை இந்திய கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கப்பல் ஊழியர்களிடம் இருந்து, 35 அதிநவீன துப்பாக்கிகள், 5 ஆயிரத்து 680 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கப்பல் ஊழியர்களுக்கு டீசல் கொடுத்து உதவியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த 8 பேரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக க்யூ பிரிவு போலீசார் 2013 அக்டோபர் 15ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. க்யூ பிரிவு போலீசார் 158 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். கப்பல் ஊழியர்கள் தரப்பில் ஜாமீன் கோரி தொடரப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். 2014 மார்ச் 26ஆம் தேதி முதற்கட்டமாக கப்பல் ஊழியர்கள் 33 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் எஞ்சியவர்களுக்கும் ஜாமீன் கிடைத்தது.

ship_1756806g
கைது செய்யப்பட்ட அமெரிக்கர்கள்

உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை எதிர்த்து, க்யூ பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றமே நடத்தலாம் என்றும், 6 மாதத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என ஜூலை 12 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி நிறைவடைந்தது. திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கிய தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 35 பேருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும் என்று கப்பல் நிர்வாகம் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமான ஆயுத வியாபாரத்தை நடத்தவே இந்திய எல்லைக்குள் சிமேன் கார்டு கப்பல் தூத்துக்குடி அருகே வந்தது என்பதே குற்றப்பத்திரிகையில் க்யூ பிரிவு போலீஸார் சொல்லியிருக்கும் காரணம். தூத்துக்குடியில் சட்டவிரோதமாக ஆயுதங்களை விற்கும் நபர்களுக்கு இவர்கள் ஆயுதங்களை வழங்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

One thought on “ஆயுதங்களுடன் அமெரிக்க கப்பல் ஏன் இந்திய கடல் பகுதிக்குள் வந்தது?

  1. Admiring the hard work you put into your website and detailed information you present.
    It’s nice to come across a blog every once in a while that isn’t the same unwanted rehashed information. Great read!

    I’ve saved your site and I’m including your RSS feeds
    to my Google account.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.