அதிமுக அரசின் ஊழல்களா? அதிமுக அரசுக்கு எதிரான ஊழல்களா? ஊழல் செய்திகளை எழுதுவது எப்படி?

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக அரசின் ஊழல் பட்டியலை புத்தகமாக வியாழக்கிழமை வெளியிட்டார். இந்தச் செய்தியை தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள் வெளியிட்ட விதம் விமர்சனத்துக்குரியதாக இருக்கிறது. அதிமுக அரசுக்கு எதிரான ஊழல் என தினமலரும் புதிய தலைமுறையும் சொல்கின்றன. அப்படியென்றால் அதிமுக அரசுக்கு எதிராக ஊழல் செய்தது யார்? இந்த ஊடகங்கள்தான் விளக்க வேண்டும்!
தினமலர் செய்தி: அதிமுக ஊழல் பட்டியல்: இளங்கோவன் வெளியீடு

சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிமுக அரசுக்கு எதிராக 25 ஊழல் புகார்கள் அடங்கிய பட்டியலை தமிழ் காங்., தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டார். இது தமிழக கவர்னரிடம் அளிக்கப்பட்டுள்ள புகார் பட்டியலாகும். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், இந்த ஊழல் பட்டியல் கவர்னரிடமும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் 2 புகார்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெல்லை வேளாண் பொறியாளர் முத்து குமாரசாமி தற்கொலை வழக்கில் விசாரணை நடத்தப்பட வேண்டும். சட்டசபை தேர்தலின் போது ஊழல் பட்டியல் முக்கிய பங்கு வகிக்கும். காங்., ஆட்சியில் ஊழல் புகார்கள் பற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஊழல் கட்சி எது என்பது இப்போது விஷயமல்ல. ஆட்சியில் உள்ளவர்கள் யோக்கியர்களா என்பது தான் முக்கியம். முந்தைய ஆட்சி காலத்தில் நடந்த ஊழல் பற்றி எல்லாம் எங்களுக்கு கவலையில்லை. ஜெயலலிதா ஆட்சியில், மோடி ஆட்சியில் என்ன ஊழல் நடக்கிறது என்பது தான் முக்கியம் என தெரிவித்துள்ளார்.

தினமணி செய்தி: தமிழக அரசின் ஊழல் பட்டியல்: புத்தகத்தை வெளியிட்டார் இளங்கோவன்

தமிழகத்தை ஆளும் அதிமுக அரசு பல்வேறு துறைகளில் ஊழலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி, அது தொடர்பான பட்டியல் அடங்கிய புத்தகம் ஒன்றை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், அதிமுக அரசு பல்வேறு துறைகளில் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி, ஊழல் பட்டியலை வெளியிட்டார்.

சுமார் 25 துறைகளில் அதிமுக அரசு ஊழல் செய்திருப்பதாகக் கூறி, அது தொடர்பான விளக்கப் புத்தகம் ஒன்றையும் இளங்கோவன் வெளியிட்டார்.

அதிமுக ஆட்சியின் ஊழல் பட்டியல் என்ற தலைப்பில் தயாரித்துள்ள இந்த புத்தகம், காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் இளங்கோவன் கூறினார்.

புதிய தலைமுறை செய்தி: அதிமுக அரசுக்கு எதிரான ஊழல் பட்டியலை வெளியிட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

 ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிரான ஊழல் பட்டியலை சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ளார். அதில் ஆவின் பால் கலப்பட ஊழல், பள்ளிக் கல்வித்துறையில் ஊழல், கோகோ கோலா நிறுவனத்திற்கு நிலம் வழங்கியதில் ஊழல், கிரானைட் ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசு மீதான 25 ஊழல் குற்றச்சாட்டு பட்டியலை ஏற்கனவே தமிழக ஆளுநரிடம் அளித்துள்ளதாவும், ஆனால் அதுகுறித்து இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.