வடஇந்தியாவை விரைவில் அதி பயங்கர பூகம்பம் ஒன்று தாக்க உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இமாலயப் பகுதிகளில் பெரிய அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், ரிக்டர் அளவுகோளின் படி அது எட்டுக்கு மேல் இருக்கும் என்றும் தேசியப் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் மணிப்பூரில் நிகழ்ந்த பூகம்பத்தை விட இது அதிக சக்தி கொண்டதாக இருக்குமெனவும் கூறப்படுகிறது. நேபாளில் நிகழ்ந்த பூகம்பத்தை ஆய்வு செய்ததில், அதே போன்றவை வட இந்தியா முழுவதும் நிகழ வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக மலைப்பிரதேசங்களில் வாய்ப்பு அதிகம் என்று கூறியுள்ளனர்.
சமீபத்தில் மணிப்பூர், நேபாளம், சிக்கிம் போன்ற பகுதிகளில் நிகழ்ந்த பூகம்பத்தின் விளைவாக பூமி அடுக்குகளில் ஏற்பட்டுள்ள விரிசல்களின் வெளிப்பாடாகவே மணிப்பூரில் சில நாட்களுக்கு முன்பு, நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் காரணாமாகவே , எதிர்காலத்தில் இமாலயப் பகுதிகளில் கடுமையான பூகம்பங்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் சுட்டி காட்டியுள்ளனர்.
இன்னும் பூமியின் அடுக்குளில் உள்ள அழுத்தம் முழுமையாக வெளியேறவில்லை என தெரிவிக்கும் விஞ்ஞானிகள் காலதாமதமாக அவை வெளியேறினால் நூற்றாண்டின் மிக அதி பயங்கர பூகம்பமாக அவை உருவெடுக்க வாய்ப்புள்ளதாகவும் அச்சம் வெளியிட்டுள்ளனர். மியான்மர், நேபாளத்தில் எல்லைப்பகுதி, இமயமலை, அருணாச்சல பிரதேசம், பீகார் மற்றும் கிழக்கு இந்திய பகுதிகளில் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இருக்கும் என்றும் கணித்துள்ளனர்.