#Viral: ஆயிரம் ரன்களை குவித்த ஆட்டோ ஓட்டுனர் மகன்: கிரிக்கெட் சாதனைகளை மாற்றி எழுதிய பள்ளி மாணவன்!

மும்பை பள்ளி மாணவனான 15 வயது இளம் வீரர் பிரணவ் தனவாடே, மும்பையில் திங்கள்கிழமை தொடங்கிய பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் அசுரத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மும்பை கிரிக்கட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பள்ளிகள் அளவிலான கிரிக்கெட் போட்டியில்,  ஒரு இன்னிங்ஸில் ஆயிரம்  ரன்களைக் குவித்த வீரராக  தனவாடே புதிய உலக சாதனையைப் படைத்துள்ளார்.

நேற்று 199 பந்துகளில் 652 ரன்களை குவித்த இந்த இளம் வீரர், இன்று பிற்பகலில் 1000 ரன்களைக் கடந்து வரலாறும் படைத்தார். 317 பந்துகளில், 129 fours மற்றும்  59 six-களை அடித்து மொத்தம் ஆயிரம் ரன்களுடன் களத்தில் நின்று வரும் இவருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதற்கு முன் – மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் கேப்டன் Brian Lara, 1994-ம் வருடம் ஆட்டமிழக்காமல் குவித்த 501 ரன்கள்தான் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

1988 -ம் ஆண்டு சச்சின் + வினோத் காம்ப்ளி இணைந்து குவித்த 664 ரன்களை – தனவாடேவின் சாதனை நினைவுக்கு கொண்டு வருவதாக பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உடைந்த  கிரிக்கெட் மட்டையுடன், திங்கள்கிழமை விளையாட தொடங்கிய தனவாடே, பாதியில் புதிய மட்டைக்கு மாறி ஆயிரம் ரன்களை குவித்தார் என்கிறார்கள். தனவாடேயின் தந்தையான ஆட்டோ ஓட்டுனர் பிராஷந்த், தன் மகனின் சாதனையை கேள்விபட்டு, ஆட்டோவிலேயே மைதானம் சென்று பார்வையாளராக கைதட்டி வந்திருக்கிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.