தொ.பரமசிவன்

ஜல்லிக்கட்டு விளையாட்டை நீங்கள் ஆதரிக்கிறீர்களா ?
“ஆமாம் , ஜல்லிகட்டு என்பது ஒரு வேட்டை சமூகத்தை சார்ந்த விளையாட்டு, மாட்டின் திமிலைப் பிடித்துக் கொண்டு ஒரு 30 அடி ஓடினாலே அவன் வெற்றி பெற்றவன்தான். அவனுக்கு பரிசு உண்டு. மாடு அடக்குதல் என்பதை விட மாட்டை அணைத்தல் என்பதுதான் சரி. இதை wild animal என்று எவன் சொன்னது ? it not a wild animal it ‘s a pet animal. மாடு என்ன காட்டிலா பிறந்து வளருது, அது வீட்டிலே பிறந்து மனிதனோடு வாழ்கிறது. காயப்படாத விளையாட்டு ஏதாவது இருக்கா? காயப்படாத விளையாட்டை இனி மேல்தான் கண்டுபிடிக்கணும். கிரிக்கெட்டில் ஒருத்தன் செத்துப் போனானே…அதை தடை செய்ய வேண்டியதுதானே?
இது வீர விளையாட்டு, பண்பாடு, பாரம்பரியம் சார்ந்தது. இதில் துன்புறுத்துதல் என்பது இல்லை .ஜல்லிகட்டு மாடு வளர்ப்பவர்கள் யாரும் மாட்டு கறி சாப்பிடமாட்டார்கள், மேலும் ஜல்லிகட்டு மாடு யார் வயலிலும் போய் பயிர் பச்சையைச் சாப்பிட்டாலும் அதை யாரும் வெரட்டக்கூட மாட்டங்க . பிராணிகள் வதை என்பதை எளிய மக்களின், பண்பாட்டிலிருந்துதான் பார்க்க வேண்டுமா? ஏன் இராணுவத்தில் தினமும் மாட்டுக்கறி கொடுக்கிறீங்களே, அதை முதலில் தடை செய்யுங்க…
” ஜல்லிகட்டை தடை எல்லாம் செய்ய முடியாது ….” இத்தனை வருசமா ஓடிக்கிட்டுதான் இருக்கு. இனியும் இது ஓடும். வாடிவாசலில் அத்துக்கிட்டு ஓடறதுதான் ஜல்லிகட்டு மாடு, கட்டிக்கிடக்கும் மாடு அத்துக்கிட்டு ஓடுனா யார் என்ன செய்ய முடியும் ,எந்த சுப்ரீம் கோர்ட் வந்து தடை செய்ய முடியும்? தொழுவத்தில் அவிழ்த்து விடுவதுதானே ஜல்லிகட்டும் ,மாடு ஓடத்தான் பார்க்கும் .யாரையும் முட்ட நினைப்பது இல்லை .இதில் சூதாட்டத்திற்கு வேலை இல்லை …
அயல் நாடுகளில் thanks giving day, harvesting day, Easter day என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள், இவை எல்லாம் harvesting festival தானே, நாம் வெப்ப மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் அதனால் நாம் சூரியனுக்கு நன்றி செலுத்துகிறோம். மாடுகளுக்கும் நன்றி செலுத்துகிறோம். இதை தடை விதிப்பது என்பது மேல்தட்டு மக்களின் ஆதிக்கம் .அவர்கள் யாரும் இந்த விளையாட்டிற்குள் வர மாட்டர்கள் …
இது திராவிடப் பண்பாடு; நாம் விலங்குகளை தெய்வமாக வணங்குபவர்கள், இயற்கையை, சூரியனை, நிலத்தை, நீரை வணங்குபவர்கள்…