மீன் மருந்து கொடுத்தா இனி ஜெயில்தான்
அறிவியல் முன்னேற்றம் என்பது அதி வேகமாக முன்னேறிக் கொண்டு செல்கையில், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மீன் மருத்துவம், மீன் மருந்து என்ற பெயரில், அப்பாவி மக்களை மோசடி செய்வதோடு நில்லாமல், நவநாகரிக உலக மக்களையும், மருத்துவ சமுகத்தினரையும் தலை கவிழச் செய்யும் விதமாக அரங்கேறும் அவலங்களுக்குப் பஞ்சமில்லை.
மீன் மருத்துவம், மீன் மருந்து வாயிலாக ஆஸ்துமா நோயைப் போக்குகிறோம் என்று அறிவியலுக்கு முற்றிலும் முரணான, புறம்பான சிகிச்சைக்கு எதிராக, ஆந்திர அறிவியல் இயக்கம், மக்கள் நாத்திக சமாஜம் போன்ற அமைப்புகள் தொடர்ந்து போராடியதின் விளைவாக தற்போது நீதிமன்றம் தலையீட்டு உள்ளது.
மீன் மருந்தை விழுங்கிய இலட்சக் கணக்கான மக்களில் ஒருவருக்குக் கூட இளைப்பு (ஆஸ் துமா) நோய் குணமாகவில்லை என்பதும் அறிவியல் ரீதியாக நிரூபிக் கப்பட்டுவிட்டது; மீன் மருத்துவம் என்பது மருத்துவம் பயிலும் மாணாக்கர்களை அவமதிக்கும் செயலே என்பதில் எள்ளவும் அய்யமில்லை.
மீன் மருத்துவம் செய்து கொள்ள வருபவர்களுக்கு தமக்கு என்ன மருந்து கொடுக்கிறார்கள் என்பதே தெரியாது; மருந்து தயாரிப்புச் சட்டத்தின்படி, என்ன மருந்து கொடுக்கப்படுகிறது, அதன் உள்ளடக்கம் என்ன, அதில் கலக்கப்படும் மருந்துகள், மூலப் பொருட்கள் என்னென்ன என்பது தெளிவாக எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இப்படிப்பட்ட நடவடிக் கைகள் எதுவும் இல்லாத போது, அது சட்ட விதிகளை ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்கும் செயலே! நோயாளி எடுத்துக் கொள்ளும் மருந்தில் என்னென்ன உள்ளடக்கங் கள் உள்ளன எனத் தெரிந்து கொள்ளும் உரிமையை சட்டம் வழங்கியுள்ளது.
இதற்கு பாடுப்பட்ட #JVV அமைப்பின் அனைத்து நண்பர்களுக்கும் புதுவை அறிவியல் இயக்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம். தொடரட்டும் அவர்களின் பணி.