அதிமுகவின் துணை கொள்கை பரப்புச் செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்பட்டதாக அதிமுக அறிவித்துள்ளது.
புதிய தலைமுறை தொலைக்காட்சியின் அக்னிப் பரிட்சை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாஞ்சில் சம்பத் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறியிருந்தார். அவருடைய பேச்சு குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் அதிமுக கட்சி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.