நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி ‘2016 எப்படி இருக்க வேண்டும்?’ என்ற தலைப்பில் வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு விவாதம் நடத்தியது. இதில் எழுத்தாளர் வே. மதிமாறன், டிசம்பர் 3 இயக்கத்தைச் சேர்ந்த தீபக் , சமூக ஆர்வலர் பெருமாள் மணிகண்டன், சமூக செயல்பாட்டாளர் மலாய்கா ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் மற்ற மூவரின் பெயரோடு அவர் இயங்கும் துறைசார்ந்து குறிப்பிடப்பட்டனர். ஆனால் மலாய்காவை மட்டும் அவர் பாலினம் சார்ந்து திருநங்கை எனக் குறிப்பிட்டனர். இது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
கேள்வி நேரம் நிகழ்ச்சியில் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளிவந்த அறிவிப்பும் இப்படித்தான் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை அறிமுகப்படுத்துகிறது.
2016 : சமூகத்தில் என்னென்ன மாற்றங்கள் தேவை?
நிகழ்ச்சியில் பங்குபெறுவோர்:
தீபக் – டிசம்பர் 3 இயக்கம்
பெருமாள் மணிகண்டன் – சமூக ஆர்வலர்
வே.மதிமாறன் – எழுத்தாளர்
மலாய்கா – திருநங்கை
இன்று இரவு 9 மணிக்கு..
உங்கள் கருத்துகளையும் பகிரலாம்..
பத்திரிகையாளர் ஜோதி ராமலிங்கம் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இட்டுள்ள பதிவு…
ஒரு தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. ஐந்து பேர் கலந்துகொண்டு ஒரு நல்ல தலைப்பில் பேசிக்கொண்டிருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவரின் பெயரைக் குறிப்பிடும்போது திருநங்கை என போட்டார்கள். ஆனால் மற்ற நான்கு பேரின் பெயரைக் குறிப்பிடும்போது நெறியாளர், எழுத்தாளர், சமூக ஆர்வலர் என்றே போட்டார்கள். அவர்களின் பாலினத்தைக் குறிப்பிடவில்லை. ஊடகத்துறையினரும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.
Chandra Barathi in sensisitive
Abdul Muthaleef சரியாக சொன்னீர்கள்
Karuppu Neelakandan உண்மையில் அவர்கள்தான் அதிகம் கற்கவேண்டும்.