புதிய தலைமுறையில் ஒளிபரப்பான ‘அக்னிப் பரீட்சை‘ நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத் அளித்தப் பேட்டி அதிமுகவில் இருந்து அவர் நீக்கப்படுவதற்கான அத்தனை கூறுகளையும் கொண்டிருக்கிறது!
•”அம்மாவால் முடியவில்லை. அதனால் வெள்ளம் பாதித்த மக்களை அவர் சந்திக்கவில்லை”
•”மக்கள் வெள்ளத்தால் பாதித்தால் நாங்கள் பொதுக்குழுவுக்கு பேனர்கள் அமைக்கக்கூடாதா?. ஒரு வீட்டில் துக்கம் நடந்ததற்காக அடுத்த வீட்டில் கல்யாணம் நடக்கக்கூடாதா?”
•”அம்மா கோட்டைக்கு செல்கிறபோது பேனர் வைத்து வரவேற்பது கட்சிக்கான விளம்பரம். எல்லாவற்றுக்கும் விளம்பரம் தேவைப்படுகிறது”
•ஏற்கனவே கண்ணுக்கு எட்டியதூரம்வரை தெரியாமல் இருந்த அதிமுகவின் எதிரிகள், “ஸ்டாலினின் ‘நமக்கு நாமே’ பயணத்தால் முன்னேறி வந்துவிட்டார்கள்”
•”திமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன்தொகை அதிகரித்துவிட்டதை சொல்லி அந்த கட்சியை தேர்தலில் வீழ்த்தினோம். இப்போது கடன் வாங்குவது உலக வழக்கமாகிவிட்டதால், தமிழகத்தின் கடன் அதிகரித்து இருப்பதை பற்றி கவலை வேண்டாம்.”
•”வெள்ளம் பாதித்த மக்களுக்கு புதிய குடிசைமாற்று வீடுகள் கட்டித்தரும் தமிழக அரசின் திட்டத்தில் எனக்கு ஒரு வீடு கிடைக்கவில்லையே என்று ஏக்கமாக உள்ளது”
எழில் அரசன் பத்திரிகையாளர், கடலூரில் வசிக்கிறார்.
அருமை ! சம்பத் பேசுவதை கேட்க பிடிக்காவிட்டாலும், குணசேகரன் பேட்டியை கையாண்ட நேர்த்திக்காகவே இரண்டு நாட்களும் தொடர்ந்து பார்த்தேன் !
LikeLike