கடந்த நான்காண்டுகளில் மூன்று முறை மட்டுமே செய்தியாளர்களை அழைத்து, முதலமைச்சர் ஜெயலலிதா பேட்டி வழங்கியுள்ள நிலையில், டிசம்பர் 29-ம் தேதி தலைமை செயலகம் வந்த ஜெயலலிதாவிடம் பேட்டி எடுக்க நிருபர்கள் முயன்றனர்.
தலைமை செயலகம் வந்துவிட்டு திரும்பும் முதலமைச்சரை பார்ப்பதற்க்காக காத்திருக்கும் பார்வையாளர்களின் வரிசையில் விடியோ கேமரா மற்றும் மைக்குடன் பத்துக்கும் மேற்பட்ட நிருபர்கள் தயாராக இருந்தனர்.
பிற்பகல் இரண்டு மணியளவில், போலீசார் அணிவகுத்து செல்ல, காரில் உட்கார்ந்தபடியே, பார்வையாளர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு ஜெயலலிதா புறப்பட்டார்.
அப்போது அங்கே கூடி இருந்த நிருபர்கள் “மேடம் மேடம்” என்று கத்தியதுடன், தங்களுக்கு பேட்டியளிக்குமாறும் கூப்பாடு போட்டனர்.
ஆனால் நிருபர்களை கண்டுகொள்ளாமல், ஜெயலலிதாவின் கார் தலைமை செயலகத்தில் இருந்து வெளியேறி சென்றதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த நிருபர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்தனர்.