தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களுக்குள் செல்ல ஆடைக் கட்டுப்பாடு வெள்ளிக்கிழமை ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின்படி “தமிழகத்தில் உள்ள கோவில்களுக்குள் வரும் ஆண்கள், மேல் சட்டை, வேட்டி, பைஜாமா, சாதாரண பேண்ட் சட்டை அணிந்து வர வேண்டும் என்றும் பெண்கள் சேலை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மற்றும் குழந்தைகளும் உடல் முழுவதும் மூடப்பட்ட ஆடைகளை அணிந்து வர வேண்டும் என்றும் கூற பட்டிருந்தது.
இந்த ஆடைக் கட்டுப்பாட்டை ஜனவரி 1-ந்தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள இந்து கோவில்களில் வெள்ளிக்கிழமை முதல் ஆடைக் கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. ஆடைக்கட்டுப்பாட்டை மீறுபவர்களை கோவில்களுக்குள் போலீசார் அனுமதிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடதக்கது.