#‎boycottfreebasics‬: மோடியை மார்க் கட்டியணைத்த ரகசியம் இதுதான்!

நரேன் ராஜகோபாலன்

ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள What Net Neutrality Activists Won’t Tell you on The Top 10 Facts about Free Basics என்கிற விளம்பரத்தில் இடம்பெற்ற குறிப்புகளுக்கான எதிர்வினை…

1 . “Free basics is open to any carriers. Any mobile operator can join us in connecting India.”

எல்லா டெலிகாம் ஆபரேட்டர்களும் டேட்டா பயன்பாட்டினை அதிகரிக்க தான் 4ஜி அலைவரிசையினை வாங்கி இருக்கிறார்கள். ஆக, இலவசமாக கொடுத்தால் வாங்காமல் இருக்க மாட்டார்கள். இது மேட்டரே கிடையாது.

2 . “We do not charge anyone anything for Free Basics. Period.” &
10 – “There are no ads in the version of Facebook on Free Basics. Facebook produces no revenue. We are doing this to connect India, and the benefits to do are clear.”

இது ஒரு தந்திரம். இதை முதலில் ஆரம்பித்தது இண்டெல். 90களின் ஆரம்பத்தில் கணினிகளுக்கான விளம்பரங்களில் ‘Intel Inside’ என்றொரு வாசகமும், இண்டெலின் லோகோவும் இருக்கும். அதாவது கணினிக்கான அடிப்படை சிப் + ப்ராசஸர். அதை தயாரித்தது இண்டெல். அதனால் ஊரில் இருக்கும் எல்லா ப்ராண்டெட்டு கணினி + அசெம்பிள்டு செட்டுகளுக்கும் இந்த லோகோவை விளம்பரத்தில் பயன்படுத்தினால் இண்டெல் காசு கொடுக்கும். அதையே தான் ஃபேஸ்புக்கும் இப்போதைக்கு ரிலையன்ஸிற்கு செய்கிறது. ஆக ரிலையன்ஸின் டேட்டா பயன்பாட்டிற்கு பணம் தராமல், விளம்பரங்களுக்கு செலவிடுவதும் மக்களை ஃபேஸ்புக்கிற்கு உள்ளேயே இருக்க செய்யும் உபாயம். கூடவே இணையத்தின் அடிப்படை கரன்சி, பணம் அல்ல. அது பயனாளர்கள். அதிகமான பயனாளர்களை உள்ளே சேர்த்தால், விளம்பரதாரர்களுக்கு அவர்களை segment, segment ஆக பிரித்து விற்கலாம். இதை இணையத்தில் switching costs barrier என்று சொல்வார்கள். நமக்கே பேஸ்புக் நண்பர்களும், ட்விட்டர் நண்பர்களும், ஜி+ நண்பர்களும் வெவ்வேறு. அதில் இருப்பவர்கள், இதில் இருக்க வேண்டிய கட்டாயமில்லை.

3. We do not pay for the data consumed in Free Basics. Operators participate because the program has proven to bring more people online. Free Basics has brought new people onto mobile networks on average over 50% faster since launching the service

பதில் மேலே சொல்லியாகிவிட்டது. முதலில் 3ஜி, 4ஜி அலைவரிசை வாங்கியதே மக்களை இணையப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காகவே. இதன் முக்கியமான வேறுபாட்டினை கவனிக்க வேண்டும். இணையப் பயன்பாடு என்பதற்கும், ஃபேஸ்புக் பயன்பாடு என்பதற்கும் ஸ்டார் வார்ஸின் கேலக்சி அளவிற்கு வித்தியாசமிருக்கிறது. இணையம் ஒரு கட்டற்ற, கட்டுபாடுகளற்ற தொலை தொடர்பு அலைவரிசை. ஃபேஸ்புக் என்பது ஒரு தனியார் நிறுவனத்தின் சேவை. பேஸ்புக் வழங்கும் Free Basics’ல் கூகிள் கிடையாது. யூ-ட்யூப் கிடையாது. 50% faster people onto mobile networks என்பது விளம்பர வாசகம், அதை இந்தியாவின் பில்லியன் மக்களை டிஜிட்டல் வெளியில் கொண்டு வருகிறேன் என்று பில்டப் கொடுப்பது factually wrong & offensive. மேலும், இந்திய குடிமக்களை டிஜிட்டல் வெளியில் கொணர்வது என்பது இந்திய அரசின் வேலை. தனியார் நிறுவனத்தின் வேலையல்ல. இந்த புள்ளிவிவர வுட்டாலக்கடிக்கெல்லாம் இந்தியர்கள் குனிய வேண்டும் என்று ஃபேஸ்புக் எதிர்பார்ப்பது தவறு.

4.  Any developer or publisher can have their content on Free Basics. There are clear technical specs openly published here …….. and we have never rejected an app or publisher who has me these tech specs.”

இணையத்திற்கான, இணைய சேவைகளுக்கான ஸ்டாண்டர்டுகளை உருவாக்க World Wide Web Consortium இருக்கிறது. பேஸ்புக் Free Basics வழியாக ஸ்டாண்டர்டு என்று உருவாக்க முயல்வது பேஸ்புக்கின் சட்ட திட்டங்கள், விதிமுறைகளுக்கான ஒரு தனிப்பட்ட வெளி. ஆக பேஸ்புக் கூண்டிற்க்குள் இருந்து வெளியாட்கள் செயல்பட செய்கின்ற பாதையேயொழிய, இதன் மூலம் சாதாரணர்களுக்கு இணையம் பற்றிய தெளிவு வந்து மேலெழப் போவதில்லை.

5 . ” Nearly 800 developers in India have signed their support for Free Basics.”

பில்லியன் மக்களுக்கான தேவைகளுக்கு 800 டெவலப்பர்கள் என்பது கிச்சு கிச்சு மூட்டக் கூடியது. இந்தியாவின் டெவலப்பர்கள் என்பவர்கள் எல்லோருக்கும் net neutrality பற்றிய புரிதல் கிடையாது. மேலும், 800 டெவலப்பர்கள் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்பதனாலேயே இது இந்தியாவின் தேவை என்று எடுத்துக் கொள்ள முடியாது.

6 . “It is not a walled garden: In India, 40% of people who come online through Free Basics are paying for data and accessing the full internet within the first 30 days. In the same time period, 8 times more people are paying versus staying on just”

கண்டிப்பாக இது Walled Garden தான். இந்த Free Basics-ல் இணையத்தின் முக்கியமான சேவைகள் எதுவுமே இல்லை. இந்தியாவைப் பொறுத்தவரை இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்தும் கீழ்காணும் சேவைகள் இதில் வரவில்லை.

கூகிள், யூ ட்யூப், அமேசான், ப்ளிப்கார்ட், யாஹு, லிங்க்டின், ட்விட்டர், ஸ்னாப் டீல், எச்.டி.எப்.சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, பே டி எம்., ஈ பே, என். டி.டிவி, ரிடீப், ரெட்பஸ், பி.எஸ்.இ, என்.எஸ்.இ அதி முக்கியமாக இந்தியாவே பயன்படுத்தும் இந்திய ரயில்வேக்கான ஐ ஆர் சி டி சி

இது எதுவுமே இல்லாமல், எப்படி 30 நாட்களுக்குள் பயனாளர்கள் டேட்டாவுக்கு காசு கொடுக்க போவார்கள். மேலும் இந்தியாவில் தரப்படும் ‘Free Basics’ ல் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் சேவைகளாக இருப்பது இரண்டே. அதில் ஒன்று ஃபேஸ்புக்கே smile emoticon இரண்டாவது விக்கிப்பீடியா. இதை வைத்துக் கொண்டு இந்தியர்களால் இணையத்தின் பயன்பாட்டினை முழுமையாக அனுபவிக்க முடியாது. இது நமக்கு எதற்கு ?

7 . “Free Basics is growing and popular in 36 other countries, which have welcomed the program with open arms and seen the enormous benefits it has brought.”

இந்த 36 நாடுகளில் பெரும்பாலானவை, ஆப்ரிக்க, தென்கிழக்காசிய ஏழை நாடுகள். அங்கெல்லாம் ஃபேஸ்புக்கின் வருமானமென்பது, அந்தந்த நாடுகளின் ஜிடிபியை விட அதிகமாக இருக்கும் சாத்தியங்கள் இருக்கிறது. இன்னுமே கூட Internet Governance Forum-இல் Free Basics பற்றிய சூடான இரு தரப்பு விவாதங்கள் நடந்துக் கொண்டிருக்கின்றன. போரும், ஏழ்மையும், வாழ்வாதார சாத்தியங்களும் இல்லாத நாடுகளோடு ஏன் இந்தியாவை ஒப்பிட வேண்டும். அப்படியே ஃபேஸ்புக்கும், மார்க் ஸுகர் பர்க்கும் நியாயவாதிகளாக இருக்கும் பட்சத்தில் ஏன் Internet. org + Free Basics னை இன்னும் வணிக நிறுவனமான பேஸ்புக்கிற்குள்ளேயே வைத்திருக்க வேண்டும் ? அதை ஏன் தனியான பவுண்டேஷனாகவோ, இலாப நோக்கமில்லாத நிறுவனமாகவோ வைக்கக் கூடாது ? பில்லியன் மக்களுக்கு இணையத்தினை அறிமுகம் செய்வதும், அவர்களை டிஜிட்டல் அறிவார்ந்த ஆட்களாக மாற்றுவதும் தான் நோக்கமென்றால் ஏன் இணையத்தின் பெருநிறுவனங்களான கூகிள், அமேசான், மைக்ரோசாப்ட், ட்விட்டர் என யாரும் இதில் பங்கு கொள்ளவில்லை ? ஆக இது ஒரு மாயவலை. இதில் சமூக நோக்க வெங்காயமெல்லாம் ஒரு புண்ணாக்கும் கிடையாது.

8. “In a recent representative poll, 86% of Indians supported Free Basics by Facebook, and the idea that everyone deserves access to free basic internet services.” &
9. “In the past several days, 3.2 million people have petitioned the TRAI in support of Free Basics.”

இது ஒரு போங்கு டூபாக்கூர் கருத்துக் கணிப்பு. பெரும்பாலான இந்தியர்களுக்கு ஒரு குழப்பான கேள்வியைக் கொடுத்து, “வாருங்கள் இந்தியாவின் டிஜிட்டல் வெளியை உருவாக்குவோம்’ என்று அறைகூவல் விடுத்தால், என்ன, ஏன், ஏது, எப்படி, எதற்காக, எவ்வாறு என எந்த கேள்வியும் இல்லாமல் Yes என்று அழுத்துவார்கள். இணைய சமநிலையின் அடிப்படை விதியே இணையத்தை அத்தனை மக்களுக்கும் பொதுவாக்கி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போல் அல்லாமல் (Haves and Have nots) டிஜிட்டலை பரவலாக்குவது. ஆனால் Free Basics இதை குப்பையில் தூக்கி வீசி விட்டு, digital divideடினை உருவாக்கி, பேஸ்புக் தான் இணையம் என்பதான பிரமையை உருவாக்க முயல்கிறது. இணையம் பயிரென்றால், Free Basics களை. களைகளும் அதே மண்ணில் தான் விளைகின்றன என்பதற்காக, களைகளை பயிர்களை தாண்டி தூக்கி நிறுத்த முடியாது.

ஆக இது முழுக்க முழுக்க ஃபேஸ்புக் இந்திய அரசாங்கம், இந்திய வெளியில் இருக்கும் அலைவரிசையை டெலிகாம் நிறுவனங்களுக்கு விற்றதில் உள்ளே புகுந்து, ‘இந்தியர்களை டிஜிட்டலுக்கு கொண்டு வருகிறேன்’ என்கிறப் போர்வையில், தன்னுடைய சுய இலாபத்தையும், இரும்புத் திரையையும் உள்ளே நுழைக்க பார்க்கிறதேயொழிய, இதில் சமூக நோக்கமெல்லாம் ஒரு பீப்புக்கும் கிடையாது.

இலவசமாக கொடுத்தால் பினாயிலை கூட குடிக்க தயாராக இருக்கிற ஊரில், ஏன் அரசு, டெலிகாம் நிறுவனங்கள் 20-ஆம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த மனித குல கண்டுபிடிப்பான இணையத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்காக குறுக்கி, அவர்களுக்கு தாரை வார்க்க வேண்டும் ?

திரும்ப திரும்ப நான் ஏன் மோடி அரசினை குறை சொல்கிறேன் என்று சலம்பும் நண்பர்களுக்கு,

இணைய சமநிலை சம்பந்தமாக இதற்கு முன் Internet . org என்கிறப் பெயரில் இதை ஃபேஸ்புக் திணித்தப் போது, ட்ராய் அதை ஒரங்கட்டியது. போன முறை பிரதமர் அமெரிக்கா போய் சிலிக்கன் பள்ளத்தாக்கில் சீன் காட்டிய போது, மார்க் ஸுகர்பர்க் ஃபேஸ்புக் அலுவலகத்திலேயே அவரும், பிரதமருமாக ஒரு Open House வைத்தது நினைவிருக்கலாம். அந்த நிகழ்வு முடிந்த சில காலத்தில், இந்த Free Basics உள்ளே நுழைக்கப்பட்டு மீண்டும் ட்ராயின் பார்வைக்கு வருகிறது. ஆக, மார்க் போட்ட மார்ங்கிற்குள் மோடி கரெக்டாக உட்கார்ந்திருக்கிறார். இந்த எழவை தான் கூரை மீது ஏறி கத்திக் கொண்டே இருக்கிறேன். இந்த இந்திய அரசு பெருமுதலாளிகளுக்கான, பெரு நிறுவனங்களுக்கான, போட்டோ ஷாப்புக்கும், Photo-Opக்குமாக வேலை செய்கின்ற ஒரு மக்கள் விரோத அரசு.

‘கட்டி அழும்போதும் தாண்டவகோனே
பணப் பெட்டி மேல கண்வைய்யடா தாண்டவகோனே” என்று பட்டுக்கோட்டையார் எழுதியது காலங்கள் கடந்தும் மாறவே இல்லை. விழிப்போடு இருப்போம். இந்த அயோக்கியதனத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்குவோம்.

‪#‎Savetheinternet‬, ‪#‎netneutrality‬ , ‪#‎boycottfreebasics‬

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.