திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நமக்கு நாமே சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதற்காக பல்வேறு இடங்களில் ஸ்டாலினை வரவேற்று, விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் அழகிரி ஆதரவாளர்களால், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
“நமக்கு நாமே திமுக மீட்புப்பயணம்” என குறிப்பிட்டு, கருணாநிதி படத்துடன் அழகிரி படத்தையும் சேர்த்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.