ஜாதி வெறியைத் தூண்டுகிறாரா திருமாவளவன்? காலச்சுவடு கண்ணன் vs யாழன் ஆதி

சமீபத்தில் திருமாவளவனின் வீடியோ பேச்சு குறித்து காலச்சுவடு பதிப்பகத்தின் பதிப்பாளர் கண்ணன் சுந்தரம்  முகநூலில் (டிசம்பர் 26) ஒரு பதிவு எழுதியிருந்தார். அதில் திருமாவளவனின் பேச்சு சாதியத்தை வலியுறுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.  மேலும் அந்தப் பதிவில்,

“திருமாவளவனின் இந்த உரை உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது. வசவு என்று கருதப்படும் சொற்களை அவர் பயன்படுத்துவதோ ஒடுக்கும் சாதிகளை சீண்டுவதோ என் அதிர்ச்சிக்கு காரணம் அல்ல. இவ்வுரையின் வழி பெண்கள் பற்றிய அவர் மன எண்ணங்கள் பல வெளியே சிந்தி விட்டன.

கலப்புத் திருமணம் ப ற்றி ஒடுக்கும் சாதியினரின் பதட்டத்திற்கும் இவரது எண்ணங்களுக்கும் வேறுபாடே இல்லை. இருதரப்பாலும் ஆண்களுக்கிடையிலான சாதியாதிகாரப் போட்டியில் பெண்கள் சப்பாணிகளாகவே பார்க்கப்படுகிறார்கள். அவர்கள் ஆண்களை விரும்பக் காரணம் ஆண்களின் ஆண்மை வீரியம் மிடுக்கு; கல்வியோ, அறிவோ, விவேகமோ, பழகும் பாங்கோ பெண்ணை மதிப்பதோ அல்ல. பிற சாதியில் ஒரு பெண் மணப்பது சொந்த சாதி ஆண்களுக்கு இழுக்கு என்பதில் ஒத்த கருத்தே வெளிப்படுகிறது.

மற்றொரு ஆணோடு சில பல மாதங்கள் வாழ்ந்த பெண்ணை நிரந்தரக் கறை படிந்தவளாகக் கருதாமல் திருப்பி அழைத்து மறுமணம் முடிப்பவர்களை மானம் கெட்டவர்களாக திருமாவளவன் கருதுகிறார். தன் குடும்பத்தினர் அத்தகைய கறைபடிந்த பெண்களை திரும்ப அழைக்க மாட்டார்கள் தலை மூழ்கி விடுவார்கள் என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்” என்று கண்ணன் எழுதியிருந்தார்.

இந்த பதிவுக்கு கவிஞர் யாழன் ஆதி இதுகுறித்து தனது முகநூலில் தெரிவித்துள்ள கருத்து..

“கண்ணன் மீண்டும் வந்துவிட்டார் ஆனால் மீண்டு வரவில்லை….

இந்த உரையை திருமாவளவன் எப்போது பேசினார் கண்ணன் இப்போது விமர்சிக்கிறார். அது பரவாயில்லை. இந்தப் பேச்சின் அர்த்தம் கண்ணன் புரிந்து கொண்டது மாதிரியல்ல. திருமாவளவன் பதிப்பகம் நடத்தி பெண்ணுரிமைப் பேசி புத்தகம் போட்டு விற்பவர் அல்லர்,

அவர் பெண்களை அணியமாக்கியிருப்பவர்.திருச்சியில் மதுவுக்கு எதிராக திரண்ட பெண்கள் விடுதலைச் சிறுத்தைகளின் பெண் அணியினர்.

இளவரசன் படுகொலை, கோகுல்ராஜ் படுகொலை இது வரை 70க்கும் மேற்பட்ட பெண்கள் ஆணவப்படுகொலை இவற்றையெல்லாம் கண்ணன் கண்டுகொள்ளாமல் இருக்கலாம். ஏனென்றால் அவர் கண்ணன். திருமாவளவன் எப்படி அமைதியாக இருக்க முடியும்? ஜாதி வன்மத்தை எதிர்த்து ஒரு அடிகூட வைக்க முடியாத கண்ணான்கள்தான் திருமாவளவன் ஜாதி வெறியைத் தூண்டுகிறார் என்கிறார்கள்.

திருமாவளவன் எந்த ஜாதி வெறியைத் தூண்டுகிறார்? தலித்துகளை அமைப்பாக்குவதும் அவர்களை அரசியல் சக்தியாக மாற்றுவதும் ஜாதி வெறியா? திருமாவளாவன் ஜாதி வெறியைத் தூண்டுகிறார் என்று கண்ணன் முடிவுக்கு வருவார் என்றால் ஜாதி அப்படியே இருக்க வேண்டும் என்று கண்ணன் விரும்புகிறார் என்று அர்த்தம்

ஒருபெண்ணைக் காதலித்தால் கொல்லப்படுவோம் என்றால் அதற்கு மறுப்பு எப்படி தெரிவிப்பது? காலச்சுவடு கட்டுரை மாதிரி பெண்ணியத்தைக் கட்டுடைத்து நான்கு நிர்வாணப்பெண் கோட்டோவியங்களைப் போட்டு அட்டையில் பெண்களின் உடலுறுப்புகள் பளிச்சென்று தெரியும் சிற்பங்களைப் போட்டுவிட்டால் பெண்ணிய விடுதலையாகிவிடுமா.

தலித் இளைஞர்களைக் கொச்சைப்படுத்தும் பேச்சை நீங்கள் ஜாதி வெறி என்று சொல்லி இடுகைப் போட முடியுமா? திருமாவளவன் ஒருபோதும் பெண்களுக்கு எதிரானவர் அல்லர். அவர் பேசுவது ஒடுக்கும் ஜாதிகளுக்கான விடுதலையையும் சேர்த்துதான். பெண்களுக்கும் சேர்த்துதான்.அவர் பெண்ணியம் தொடர்பான சரியான கொள்கை நிலைப்பாடுடையவர்.

ஒருவேளை இது பெண்களுக்கு எதிரானது என்றால், திருமாவளவன் பெண்ணுரிமைக்கு எதிரானவர் என்றால் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு தலித் பெண் ஆசிரியையைப் படைத்தவர் மிகப்பெரிய பெண்ணுரிமைப் போராளியோ?

மக்கள் நலக்கூட்டணி வலுவடைகிறது, திருமாவளவன் முக்கிய இடம் வகிக்கிறார் என்பதை உடைக்க இப்போது வந்து இப்படி ஒரு விமர்சனம். எப்படியெல்லாம் வேலை செய்கின்றன கையுளிகள்!

(சில நியாயமார்கள் பேசாமல் மௌனம் காத்து இருந்துவிடக்கூடாது நான் சொல்வது தவறு என்றால் சொல்லுங்கள்)” என்று பதிவிட்டிருக்கிறார்.

சர்ச்சைக் கிளப்பியிருக்கும் அந்த வீடியோ கீழே…

One thought on “ஜாதி வெறியைத் தூண்டுகிறாரா திருமாவளவன்? காலச்சுவடு கண்ணன் vs யாழன் ஆதி

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.