இந்தியாவில் உள்ள பிச்சைக்காரர்களில் 21 % பேர் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் என்று மத்திய அரசின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
2011ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் சுமார் 4 லட்சம் பேர் பிச்சைக்காரர்களாக உள்ளனர் என்றும் இவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி படிப்பையும், பாதிக்கும் அதிகமானோர் பட்ட படிப்பையும், மீதமுள்ளவர்கள் பட்ட மேற்படிப்பையும் முடித்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
படிப்பிற்கு ஏற்க வேலை கிடைக்காதது, அதில் போதிய வருமானம் கிடைக்காதது, வேலை பறிபோனது உள்ளிட்டவைகள்தான், தங்களை பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளியதாக அவர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவமனை வார்ட் பாயாக பணியாற்றி, தற்போது பிச்சை எடுக்கும் ஒருவர் கூறுகையில், “ஏற்கனவே பார்த்துக் கொண்டிருந்த வேலையில் ஒரு நாளைக்கு 100 ரூபாய் மட்டுமே வருமானம் கிடைத்தது. தற்போது நாள் ஒன்றிற்கு 200 ரூபாய் கிடைக்கிறது” என குறிப்பிட்டுள்ளதாக இந்திய அரசின் புள்ளி விவரம் சுட்டிக் காட்டுகிறது.