சுந்தரம் தினகரன்
இதை உருவாக்க அவருக்கு உந்துதல் அளித்த இடம் மதுரை காந்தி அருங்காட்சியகம் என்றால் ஆச்சர்யம் தான்! அங்கு வந்தபோது மகாத்மா நுண்நோக்கியை வைத்துள்ள படத்தைப் பார்த்திருக்கிறார். அங்கிருந்தவரிடம் விளக்கம் கேட்டபோது ஒரு காலத்தில் மலேரியா காய்ச்சல் தீவிரமாக இருந்தது. அதை கண்டறிவதற்காக நுண்நோக்கியை செல்லும் இடத்திற்கெல்லாம் கொண்டு சென்றாராம் என்று கூறியுள்ளார். அப்போதே எளிமையான நுண்நோக்கியை கண்டுபிடிக்கவேண்டும் என்ற உந்துதல் வந்திருக்கிறது. பின் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கு வந்தபிறகு தன நண்பர்களுடன் இனைந்து சுமார் இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்து இந்த மடிக்கக்கூடிய நுண்நோக்கியை கண்டறிந்துள்ளார்.
அவரது நோக்கம் நோய் பரப்பும் கிருமிகளை எளிமையாக கண்டறியவேண்டும். குழந்தைகளின் கல்விக்காக பயன்படவேண்டும் என்பதே! வியாபார நோக்கம் அறவே கூடாது. பள்ளிக்குழந்தைகளை இத்தொழில்நுட்பம் சென்றடையவேண்டும். அதன் மூலம் ஆராய்ச்சிகளின் மீது அவர்களுக்கு ஆர்வத்தை உருவாக்கவேண்டும் என்பதே!
அதன் முகமாகவே மதுரை பல்கலைகழக பேராசிரியர் கிருஷ்ணசாமியும், துவரிமானை சேர்ந்த மற்றொரு பேராசிரியர் சாம், ஈடன் கல்விநிறுவனத்தின் மொபா, முதல்வர் இந்திரா, மற்றும் நான் தமிழ்நாடு அறிவியல் இயக்க துளிர் இல்லக்குழந்தைகளுக்கு இந்த மடக்கு நுண்நோக்கி குறித்த கருத்துப்பட்டறையில் உருவாக்கு திறனையும் செயல்முறையும், மதுரை பல்கலைகழக பேராசிரியர் கிருஷ்ணசாமியும், துவரிமானை சேர்ந்த மற்றொரு பேராசிரியர் சாமும் விளக்க நாங்கள் அதன் செயல்திறனையும், பயன்பாடுகள் குறித்தும் ஈடன் கல்விநிறுவனத்தின் கருந்தரங்க அறையில் நடத்திக்காட்டினோம்.
நீங்கள் படத்தில் பார்ப்பது அந்த காட்சிகளே! மற்றொரு படத்தில் இருப்பது பேன் அதன் நடுப்பகுதியில் அப்போது தான் உறிஞ்சிய ரத்தத்தையும் காணலாம். பின்னது இலையை வைத்து பெரிதுபடுத்திய படம். ஓடையின் அருகே முத்துப்பட்டி மக்களை வைத்தும் இது நிகழ்த்திக்காட்டப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இந்த ஒரிகாமி மடக்கு நுண்நோக்கியை 2000 க்கும் மேற்பட்ட துளை இல்லக்குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் எண்ணமும் இருக்கிறது. அதற்கான முயற்சிகளை பொறுப்பாளர்கள் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன்!