படுத்த படுக்கையாக இருந்த இவர், இன்று எழுந்து நடக்கிறார்: ஆண்டு இறுதியில் இதோ ஒரு மருத்துவ உண்மைக்கதை!

2015 மறக்க இயலாத ஆண்டு.

ஆம்! இது நான் பிறந்த ஆண்டு. பிறந்து, குழந்தையை போல் தவழ்ந்து, நடை பழகி , சாப்பிட பழகி எழுந்த ஆண்டு.

முகநூலில் மார்க் அண்ணன் ஒருவருட அறிக்கையை கொடுப்பதாக எல்லா நண்பர்களும் பகிர்கிறார்கள். ஆனால் இது எனது அறிக்கை.

சிறு பிரச்சனைக்கெல்லாம் அலோபதியை நம்பி ஓடியதன் விளைவாக ஏற்பட்ட உடல் உபாதையும்(குடலில் முழுக்க புண்கள் ஏற்பட்டு, அது ஆறாது என்று சொல்லப்பட்டது), அதன் பின் பல சிகிச்சைக்கு பின் அந்த நவீன விஞ்ஞானபூர்வமான மருத்துவம் கைவிட்ட பின், 6 வருடங்கள் கடுமையான வாழ்வா சாவா போராட்டங்களுக்கு பின், நான் இறந்துவிடுவேன் என்று இந்த ஆண்டின் துவக்கத்தில் பலராலும் நம்பப்பட்ட நான், மீண்டும் மீண்டு எழுந்த ஆண்டு இந்த 2015.

சிலவருடம் முன் ஏற்பட்ட இந்த பாதிப்பே, என்னை இயற்கையின் பால் திருப்பியது. அதுவே நான் அக்குபங்சர் மருத்துவம் படித்து , மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் செய்து வருகிறது.

நடையிழந்து, உடல் மெலிந்து, படுத்த படுக்கையில், படுக்கையிலேயே மலம், சிறுநீர் கழித்து, அங்கேயே உணவையும் உண்டு வாழ்ந்த காலம் இந்த 2015.

முகநூலில் பல மருத்துவ பதிவுகளையும் நகைச்சுவைகளையும் எழுதிய நான், (அதில் பலவை படுத்த படுக்கையிலே இருந்து எழுதியதே) இந்த பிரச்சனையில் நான் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம்.

1. இயற்கையின் ஆற்றல், 2.எனக்கு பணிவிடை செய்த மனைவி எனக்கு ஒரு தாய் இந்த இரண்டையும் எனக்கு புரியவைத்தது.

உதவி செய்த உறவுகள், உதவி என்ற பெயரில் உணர்வுகளை காயப்படுத்தி, உணர்ச்சிவசப்படுத்தியதாலோ என்னவோ….(இந்த வரியை முடிக்க மனமில்லை)

ஆனால்! நான் மீண்டு எழ உதவிய எனது சக அக்குபங்சர் ஹீலர்கள்

மகி.ராமலிங்கம்
உமர்ஃபாருக்
தங்கமணி
தேவராஜன்
பாலமுருகன்
நிசார்
உஸ்மான் அலிகான்
காஞ்சனமாலா

இவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைபட்டவன். நான் மீண்டும் வரவேண்டும் என்ற எண்ணம் வைத்த அனைத்து நண்பர்களுக்கும் நான் நன்றி சொல்கிறேன். இந்த சமயத்தில் உறவுகள் சிலர் விலகியும், நட்புகள் சில விலகியும் போனது வலி இன்னும் உள்ளது.

விட்டு நீங்கியது அனைத்தும் கழிவு என்பதால், அதனையும் எற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். நான் குணமடைய இயற்கை என்னிடம் இருந்து பிரித்த உறவுகள் மற்றும் நட்புகளுக்கும் நன்றி சொல்கிறேன்.

தற்போது என் நட்பு வட்டத்தில் பல நல்ல உள்ளங்களை கொண்டு சேர்த்து உள்ளேன். அந்த நட்புகளுக்கும் நன்றி சொல்கிறேன்.

படுக்கையில் இருந்த சமயத்தில் உடன் இருந்து , சில மாதங்களாக தூங்காமல் என்னை பார்த்துக்கொண்ட என்னை பெற்ற என் பெற்றோருக்கும், என் தம்பிக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்

படுக்கையில் நான் செய்த அசிங்கங்களை முகம் சுளிக்காமல் சுத்தம் செய்து, இரவு முழுதும் தூங்காது இருந்து, என் உடல் சில்லிட்டு போகும் போது சமயோசித்தமாக செயல்பட்டு எமன் வாயில் இருந்து காத்த என் மனைவிக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டவன்.

எனக்காக கோவிலில் பூஞை செய்துவிட்டு வந்த எனது ஆங்கில ஆசிரியர், சிறுவயது முதல் என்னால் அன்புடன் ராஸ்கோல் என்று அழைக்கப்பட்ட திரு.ராஜகோபால் அவர்களுக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டவன்.

மேலே சொன்ன இத்தனை பேரின் கூட்டு முயற்சியே, இன்று நான் உங்கள் முன் முகநூலில் இருக்க காரணம் என்றால் மிகையாகாது.

மொத்தத்தில் இந்த ஆண்டு நடந்த நிகழ்வுகள், எனக்கு புது தெம்பையும், ஆரோக்கியத்தையும், மனதிடத்தையும், நட்பில் இருக்கும் நல்ல உள்ளங்களான உங்களையும் கொடுத்த இந்த ஆண்டின் நிகழ்வை திரும்பியும் பார்க்கிறேன்.

மொத்தத்தில் இந்த 38 வருட வாழ்வில், இந்த ஆண்டு எனக்கு கொடுத்த படிப்பினையை வேறு எங்கும் கிடத்தது இல்லை. வரவுள்ள புத்தாண்டிலும் உங்களுடன் நட்பில் இருந்து திளைப்பேன்.

எந்த ஒரு நோய்க்கும் முழு தீர்வு உண்டு. ஆனால் இரசாயனங்களும், அறுவை சிகிச்சைகளும் அந்த தீர்வை தராது.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

அன்புடன்
கு.நா.மோகன்ராஜ்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.