தஞ்சையில் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற தேமுதிக ஆர்ப்பாட்டத்தின் போது, முதலமைச்சர் ஜெயலலிதாவின் பேனர்களை கிழித்ததாக கூறி 13 தேமுதிகவினரை செவ்வாய்கிழமை காலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே இவ்விவகாரத்தில் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதால், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவசர அவசரமாக முன் ஜாமீன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது பிற்பகல் விசாரணை நடைபெற உள்ளது.