“மனிதநேயம் என்பது ஒருவழிப்பாதை அல்ல” ஆளூர் ஷா நவாஸ்

வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மோகன் சித்ரா தம்பதியர், தமது குழந்தைக்கு யூனுஸ் என்று பெயர் வைத்தார்களல்லவா! அந்த யூனுஸும் நானும் இன்று திருவொற்றியூரிலுள்ள ஆரோக்கிய தாஸ் வீட்டுக்கு சென்றோம்.
யார் அந்த ஆரோக்கியதாஸ்?
திமுகவின் நகரத் துணைச் செயலாளர். இருமுறை கவுன்சிலராக இருந்தவர். மக்கள் சேவகர். விஷ பூச்சி கடித்து பலியான இம்ரானின் அண்டை வீட்டுக்காரர். இம்ரானை மருத்துவமனையில் சேர்த்தது முதல் இம்ரான் மரணத்தை வெகுமக்களின் கவனத்துக்கு கொண்டுவந்தது வரை அனைத்தையும் உடனிருந்து செய்தவர். அத்துடன் நிற்கவில்லை அவர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை வரவழைத்து இம்ரானின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்னதோடு, தனது மகளின் நகையை அடகுவைத்து 50,000 ரூபாய் நிதியும் வழங்கினார்.
10592795_1939191612972119_7412103256347323888_n
கடந்த 17-ஆம் தேதி தலைவர் திருமாவளவன் அவர்கள் இம்ரான் இல்லத்துக்குச் சென்றபோது முழுவதும் உடனிருந்தார், ஆரோக்கியதாஸ். அத்தகைய பொது நலத் தொண்டர், அன்று மாலையில் தனது வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்து அகால மரணம் அடைந்தார்.

பெரிய கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருந்தபோதும், கவுன்சிலர் பதவியை இருமுறை வகித்தபோதும் எளிய வாழ்க்கை வாழ்ந்துள்ளார். அவரது வீடே அதற்கு சாட்சியாய் உள்ளது. அவரின் மூன்று பெண் மக்களுக்கும் இன்னும் திருமணமாகவில்லை. குடும்பமே கண்ணீர் வடிக்கிறது.

நண்பர் யூனுஸ் இன்று, ஆரோக்கிய தாஸ் குடும்பத்துக்கு ஆறுதல் நிதி வழங்கினார். மனிதநேயம் என்பது ஒருவழிப்பாதை அல்ல என்பதை நிரூபிக்கிறார் யூனுஸ்!

ஆளூர் ஷா நவாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.