திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியைச் சேர்ந்த காஜா முகைதீன் என்ற இளைஞர், கடந்த 21ஆம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து, டிஎஸ்பி தலைமையில் 5 தனிப்படை அமைத்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் சமூக நல்லிணக்கத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான நடவடிக்கை என தெரிவித்துள்ள முஸ்லீம் அமைப்புகள், குற்றவாளிகளை துரிதமாக கண்டுபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
ஏர்வாடியில் கொலையான இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்துள்ளனர்.